ஆஸ்திரேலியா இல்ல.. இந்த டி20 உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு போட்டியே அந்த டீம் தான் – வருண் ஆரோன் பேட்டி

Varun Aaron
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணியானது 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை வென்று அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய அணிக்கு போட்டி இவங்கதான் : வருண் ஆரோன்

எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதால் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாட இருக்கும் இந்திய அணி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்த தொடரில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடப்போகும் எதிரணி எது? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வருண் ஆரோன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : நியூசிலாந்து அணி தான் இந்திய அணிக்கு பெரிய சவாலை அளிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் உள்ள ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். அந்த வகையில் நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள். அதேபோன்று அந்த அணி பந்து வீச்சிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனை விட தற்போது இஷான் கிஷன் தான் டீமுக்கு தேவை – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

அதுமட்டும் இன்றி ஐசிசி தொடர்களின் போது வெகு எளிதாக போட்டிகளை விட்டுக் கொடுக்காமல் கடைசிவரை வெற்றிக்காக போராடும் மனப்பான்மை அந்த அணியிடம் உள்ளது. எனவே பெரியளவில் சூப்பர் ஸ்டார் வீரர்கள் அவர்களிடம் இல்லை என்றாலும் இந்திய அணிக்கு எதிராக கடினமான அணியாக நியூசிலாந்து அணி இருக்கும் என்று தான் கருதுவதாக வருண் ஆரோன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement