சஞ்சு சாம்சனை விட தற்போது இஷான் கிஷன் தான் டீமுக்கு தேவை – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Aakash Chopra
- Advertisement -

2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள வேளையில் தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் இந்திய அணியானது மிகவும் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுவதால் நிச்சயம் சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.

சஞ்சு சாம்சன் வேணாம்.. இஷான் கிஷன் தான் வேணும் : ஆகாஷ் சோப்ரா

இவ்வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக யார் விளையாடுவார்கள்? என்பதே முக்கிய கேள்வியாக பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. ஏனெனில் ஒருபுறம் அபிஷேக் சர்மா தனது இடத்தை உறுதி செய்துவிட்டாலும் இரண்டாவது துவக்க வீரருக்கான போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

அதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் போது சஞ்சு சாம்சன் சொதப்பலாக விளையாடிய வேளையில் இஷான் கிஷன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் அவரே டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று பலரும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சனின் இடம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கொடுத்தும் அவர் அந்த வாய்ப்புகளை வீணடித்து விட்டார். நிர்வாகம் அவருக்கு போதுமான ஆதரவை அளித்துவிட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : பயிற்சி போட்டியில் இவங்க தான் துவக்க வீரர்கள் சூரியகுமார் யாதவ் அறிவிப்பு – அப்போ சஞ்சு சாம்சன் காலியா?

ஆனால் அவர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்றோ ஒருநாள் நன்றாக விளையாடுவார் என்று சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை எதிர்பார்ப்பதை விட தற்போதைக்கு மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் இஷான் கிஷனே துவக்க வீரராக விளையாட வேண்டும் என்று வெளிப்படையாக தனது கருத்தினை அவர் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement