16 ஓவரில் பந்தாடிய டெல்லி.. இதெல்லாம் தோல்வியே இல்லை.. இதை செஞ்சு ஈஸியா வந்துருவோம்.. கமின்ஸ் பேட்டி

Pat Cummins
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் முப்பதாம் தேதி விசாகப்பட்டினத்தில் மதியம் 3.30 மணிக்கு பத்தாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் டெல்லிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி அதிரடியாகவே விளையாட முயற்சித்து 18.4 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இஷான் கிசான் 2, அபிஷேக் சர்மா 1, நிதிஷ் ரெட்டி 0, டிராவிஸ் ஹெட் 22 என முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதிகபட்சமாக இளம் வீரர் அன்கிட் வர்மா 74 (41) ஹென்றிச் க்ளாஸென் 32 (19) ரன்கள் அடித்து ஓரளவு கை கொடுத்தனர். மறுபுறம் காட்டுதனமாக அடிக்கக்கூடிய ஹைதராபாத் அணியை சுருட்டிய டெல்லிக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 5, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

டெல்லி அபாரம்:

அடுத்ததாக விளையாடிய டெல்லிக்கு 81 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கத்தைக் கொடுத்த டு பிளேஸிஸ் 50 (27) ரன்கள் விளாசி அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜேக் பிரெசர் மெக்குர்க் 38 (32) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக கேஎல் ராகுல் 15 (5) ரன்கள் விளாசி அதிரடியாக விளையாடி பெவிலியன் திரும்பினார்.

அவருடன் சேர்ந்து விளையாடிய அபிஷேக் போரேல் தனது பங்கிற்கு 34* (18) ரன்கள் எடுத்தார். இறுதியில் திரிஷ்டன் ஸ்டப்ஸ் 21* (14) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 16 ஓவரிலேயே 166-3 ரன்கள் எடுத்த டெல்லி 7 விக்கெட் வித்தியாசத்தில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

இதெல்லாம் தோல்வியில்ல:

மறுபுறம் ஜீசன் அன்சாரி 3 விக்கெட்டுகள் எடுத்தும் ஹைதராபாத் தங்களது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் லேசான மாற்றங்களை செய்தாலே தங்களது அணியால் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என்பதால் இதெல்லாம் தோல்வியே இல்லை என்ற வகையில் ஹைதராபாத் கேப்டன் பட் கமின்ஸ் கவலையின்றி பேசியுள்ளார். இதுப்பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அன்கிட் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கொடுத்தார். ஆனால் நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்கவில்லை. ரன் அவுட்டும் அப்படியே அமைந்தது. இது போன்ற விஷயங்கள் நடப்பது சகஜம். கடந்தப் போட்டியை போல் இது மோசமான பெரிய தோல்வி என்று நினைக்கவில்லை. கடந்த 2 போட்டிகளாகவே அனைத்தும் எங்களது வழியில் செல்லவில்லை”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும் 2 தொடர் 8 போட்டிகள்.. மகளிர் அணி 7 போட்டிகள்.. வெளியான அட்டவணை

“ஓரிரு விஷயங்களை மாற்றினால் முடிவுகள் மாறும். அன்கிட் அதிகம் அறியப்படாதவர் என்றாலும் இத்தொடரில் அபாரமாக வந்துள்ளார். அவர் எங்களுக்கு பாதி வாய்ப்பைக் கொடுத்தார். மொத்தமாக எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களால் என்ன முடியும் என்பதில் கொஞ்சத்தை காண்பித்தனர். எனவே நாங்கள் எதையும் அதிகம் மாற்ற வேண்டியதில்லை” என்று கூறினார்.

Advertisement