ஆஸ்திரேலியாவில் இந்தியா விளையாடும் 2 தொடர் 8 போட்டிகள்.. மகளிர் அணி 7 போட்டிகள்.. வெளியான அட்டவணை

IND vs AUS
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக ஐபிஎல் தொடரில் அனைத்து இந்திய வீரர்களும் விளையாடி வருகிறார்கள். அது முடிந்ததும் இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்நிலையில் அந்த தொடருக்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 2 புதிய தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி 4 – 1 என்ற கணக்கில் தோல்வியையும் சந்தித்தது. அதன் காரணமாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது.

- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்:

அந்தத் தோல்விக்கு பின் தற்போது வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியா அங்கே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா சந்திக்கிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் அந்தத் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இதில் ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய நேரப்படி முழுவதும் பகல் இரவாக நடைபெறுகிறது. டி20 தொடர் முழுவதும் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது. அந்த சுற்றுப்பயணத்திற்காக ஆஸ்திரேலியா வாரியம் என்று வெளியிட்டுள்ள அட்டவணை பின்வருமாறு:
முதல் ஒன்டே: அக்டோபர் 19, பெர்த், பெர்த்
2வது ஒன்டே: அக்டோபர் 23, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
3வது ஒன்டே: அக்டோபர் 25, எஸ்சிஜி, சிட்னி

- Advertisement -

மகளிர் அணி:

முதல் டி20: அக்டோபர் 29, மனுக்கா ஓவல், கான்பெரா
2வது டி20: அக்டோபர் 31, எம்சிஜி, மெல்போர்ன்
3வது டி20: நவம்பர் 2, பெலர்ரிவ் ஓவல், ஹோபார்ட்
4வது டி20: நவம்பர் 6, கோல்ட் கோஸ்ட் ஸ்டேடியம், கோல்ட் கோஸ்ட்
5வது டி20: நவம்பர் 8, காபா, பிரிஸ்பேன்
இது போக 2026 துவக்கத்தில் ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி டி20 ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அந்த சுற்றுப் பயணத்திற்கான அட்டவணை பின்வருமாறு:

இதையும் படிங்க: 163க்கு ஆல் அவுட்.. காட்டடி ஹைதராபாத்தை சுருட்டிய டெல்லி.. தெறிக்க விட்ட ஸ்டார்க் 17 வருட வரலாற்று சாதனை

முதல் டி20: பிப்ரவரி 15, எஸ்சிஜி, சிட்னி
2வது டி20: பிப்ரவரி 19, மனுக்கா ஓவல், கான்பெரா
3வது டி20: பிப்ரவரி 21, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட்
முதல் ஒன்டே: பிப்ரவரி 24, ஆலன் பார்டர் பீல்ட், பிரிஸ்பேன்
2வது ஒன்டே: பிப்ரவரி 27, பெலர்ரிவ் ஓவல், ஹோபார்ட்
3வது ஒன்டே: மார்ச் 1, சிட்டிபவர் சென்டர், மெல்போர்ன்
ஒரு டெஸ்ட்: மார்ச் 6 – 9 (பகல் இரவு), வாக்கா, பெர்த்

Advertisement