163க்கு ஆல் அவுட்.. காட்டடி ஹைதராபாத்தை சுருட்டிய டெல்லி.. தெறிக்க விட்ட ஸ்டார்க் 17 வருட வரலாற்று சாதனை

Mitchell Starc
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ம் தேதி மதியம் 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் பத்தாவது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு முதல் ஓவரிலேயே அபிஷேக் ஷர்மா தவறான புரிதலால் 1 ரன்னில் ரன் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த இசான் கிசானை 2 ரன்னில் அவுட்டாக்கிய மிட்சேல் ஸ்டார்க் அடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டியையும் டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதோடு நிற்காத அவர் மறுபுறம் 22 (12) ரன்கள் அடித்து சவாலைக் கொடுத்த தனது சொந்த நாட்டைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட்டை காலி செய்தார். அதனால் 37-4 என ஆரம்பத்திலேயே ஹைதராபாத் தடுமாறியது.

- Advertisement -

டெல்லி அசத்தல்:

அப்போது இளம் வீரர் அங்கித் வர்மா அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த ஹென்றிச் கிளாசின் ஐந்தாவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அச்சுறுத்தலைக் கொடுத்த போது 32 ரன்னில் மோகித் சர்மா வேகத்தில் பெவிலியன் சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய அங்கித் வர்மா அரை சதத்தை அடித்து போராடினார்.

ஆனால் எதிர்ப்புறம் அவருக்கு அபினவ் மனோகர் 4, கேப்டன் பட் கமின்ஸ் 2 ரன்களில் அவுட்டாகி கை கொடுக்கவில்லை. இறுதியில் அங்கித் வர்மா 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 74 (41) ரன்களில் அவுட்டானார். அதனால் 18.4 ஓவரில் ஹைதராபாத் அணியை163 ரன்களுக்கு டெல்லி ஆல் அவுட் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் பொதுவாகவே அடித்து நொறுக்கக்கூடிய ஹைதராபாத் குறைந்தது 200 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஸ்டார்க் வரலாற்று சாதனை:

அப்படிப்பட்ட ஹைதராபாத் அணியை இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக பவுலிங் செய்து டெல்லி கட்டுபடுத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர வீரர் மிட்சேல் ஸ்டார்க் 35 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து தெறிக்க விட்டார். இதனால் தம்முடைய டி20 கரியரில் முதல் முறையாக அவர் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதையும் படிங்க: பிளான் பண்ணி எதுவும் பண்ணல.. ரஷீத் கானுக்கு 4 ஓவர்களை வழங்காதது ஏன்? – சுப்மன் கில் விளக்கம்

அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணிக்காக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வெளிநாட்டு பவுலர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 17 வருடங்கள் கழித்து டெல்லிக்காக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2008ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அமித் மிஸ்ராவும் 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Advertisement