இந்தியாவை மிஸ் பன்றோம்.. அவங்க இல்லனாலும் நாங்க சாதனை படைப்போம்.. பட் கமின்ஸ் பேட்டி

Pat cummins
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்குகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்க உள்ளது. அதற்கு முன்பாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஃபைனல் நடைபெறுகிறது.

2021, 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. ஆனாலும் அந்தப் போட்டிகளில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்த இந்தியா ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. ஆனால் இம்முறை அதே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 – 0 (3), 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா படுதோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

இந்தியாவை மிஸ் செய்றோம்:

அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாமல் இந்தியா வெளியேறியது. மறுபுறம் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா ஜூன் 11ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை மிஸ் செய்வதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கூறியுள்ளார்.

ஏனெனில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 உலகக் கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா பட் கமின்ஸ் தலைமையில் கோப்பைகளை வென்றது. ஆனால் இம்முறை இந்தியா ஃபைனலில் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தக்க வைத்து சாதனை படைக்கும் என்று கமின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கமின்ஸ் நம்பிக்கை:

இது பற்றி கமின்ஸ் பேசியது பின்வருமாறு. “ஏதோ ஒரு வழியில் இங்கே நீங்கள் இந்தியா இருப்பதை எதிர்க்காதீர்கள். சொந்த மண்ணில் இங்கிலாந்து கொஞ்சம் வலுவான அணியாக இருக்கும். நியூசிலாந்து அணியும் இறுதிப் போட்டிகளில் எப்போதும் சிறப்பாக செயல்படக்கூடியது. அதே விஷயங்கள் ஐசிசி தொடர்களில் தென்னாபிரிக்கா அணிக்கும் பொருந்தலாம்”

இதையும் படிங்க: கிளவுஸை தூக்கி எறிந்து அம்பயர் மீது கோபத்தை கக்கிய அஸ்வின்.. தண்டனையை அறிவித்த டிஎன்எல்பில் நிர்வாகம்

“அதே சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களை நாங்கள் அதிகம் பார்க்கவில்லை. அதே சமயம் ஆஸ்திரேலியா – இந்தியா இல்லாத ஃபைனலை கொண்டிருப்பது நல்லது. உங்களுக்கு எதிரே இருப்பவரை மட்டுமே உங்களால் தோற்கடிக்க முடியும். ஃபைனலுக்கு நாங்கள் வந்த பாதை கடினமாக இருந்தது. தென்னாபிரிக்கா அணியின் பவுலிங் எப்போதும் உயர்ந்து நிற்கக்கூடியதாக இருக்கும். கேசவ் மகாராஜ் முதன்மை ஸ்பின்னராக இருக்கிறார். அவர்களிடம் எங்களுக்கு சவாலைக் கொடுக்கும் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள்” எனக் கூறினார்.

Advertisement