2 கோப்பை வென்ற மார்க்ரம் கிடையாது.. தங்களுடைய புதிய கேப்டனை அறிவிக்க உள்ள ஹைதராபாத்.. வெளியான தகவல்

SRH Aiden Markram SA20 Kavya Maran
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இம்முறை கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் வாங்கி தயாராக இருக்கின்றன. சொல்லப்போனால் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கத்தில் தங்களுடைய பயிற்சிகளை இப்போதே ஆரம்பித்துள்ளனர்.

இம்முறை கோப்பையை வெல்வதற்கு போட்டியிடும் 10 அணிகளுக்கு மத்தியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐடன் மார்க்கம் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2016இல் கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை கழற்றி விட்ட ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் தலைமையில் வெற்றி காண முடியவில்லை.

- Advertisement -

புதிய கேப்டன்:
அந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் புதிதாக துவங்கப்பட்ட எஸ்ஏ டி20 தொடரில் ஹைதராபாத் அணியின் கிளையான சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஐடன் மார்க்கம் தலைமையில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் அவருடைய தலைமையில் 2023 ஐபிஎல் தொடரில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

ஆனால் கடந்த மாதம் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரின் 2024 சீசனில் மீண்டும் அபாரமாக விளையாடிய ஈஸ்டர்ன் கேப் அணி ஐடன் மார்க்கம் தலைமையில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. அதனால் இம்முறையும் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ஐடன் மார்க்ரமுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை ஹைதராபாத் தங்களுடைய புதிய கேப்டனாக நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 2 ஐசிசி தொடர்களை ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வென்று கொடுத்த பட் கமின்ஸை ஏற்கனவே வீரர்கள் ஏலத்தில் 20.50 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு ஹைதராபாத் வாங்கியது. எனவே பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ள அவரிடம் ஒரே இடத்தில் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற அனுபவம் இருப்பதால் தங்களுடைய புதிய கேப்டனாக நியமிக்க ஹைதராபாத் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காபா தெரியுமா.. உங்களுக்கெல்லாம் இதான் பதில்.. இங்கிலாந்துடன் விராட் கோலிக்கும் பதிலடி கொடுத்த கவாஸ்கர்?

சொல்லப்போனால் வார்னர், வில்லியம்சன் ஆகிய 2 மகத்தான வீரர்களையே அசால்டாக மாற்றிய ஹைதராபாத் இதையும் செய்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது என்றே சொல்லலாம். மேலும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கும் தென்னாபிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து தமக்கு விடுப்பு கொடுக்குமாறு ஹைதராபாத் நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisement