காபா தெரியுமா.. உங்களுக்கெல்லாம் இதான் பதில்.. இங்கிலாந்துடன் விராட் கோலிக்கும் பதிலடி கொடுத்த கவாஸ்கர்?

Sunil Gavaskar 8
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பல்வேறு காரணங்களால் விலகியதை பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்துவோம் என்று மைக்கேல் ஆதர்டன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் தெரிவித்தனர்.

ஆனால் கடைசியில் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களை வைத்தே இங்கிலாந்தை தோற்கடித்துள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை உலக அணிகளுக்கு மீண்டும் காண்பித்துள்ளது. இந்நிலையில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் தொடரில் 36க்கு ஆல் அவுட்டாகி தவித்த போது விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியாவில் வீழ்த்தியதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கவாஸ்கர் பதிலடி:
குறிப்பாக அத்தொடரின் கடைசி போட்டியில் இளம் வீரர்களை வைத்தே காபா கோட்டையை தகர்த்த இந்தியா தற்போதைய இங்கிலாந்து தொடரிலும் முக்கிய வீரர்கள் இல்லாமல் வென்று காண்பித்துள்ளதாக கவாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அதை விட தாங்கள் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைக்கும் சில நட்சத்திர வீரர்களுக்கு இந்த 2 தொடர்கள் சமர்ப்பணம் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

சொல்லப்போனால் அவர் கூறும் இந்த 2 தொடர்களிலுமே விராட் கோலி இல்லாமல் இந்தியா வென்றது. அந்த வகையில் இங்கிலாந்து போன்ற எதிரணிகளுடன் விராட் கோலிக்கும் சேர்த்து மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ள கவாஸ்கர் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் பெரிய வீரர்கள் இல்லாமல் தடுமாறிய இந்திய அணி காபாவில் மட்டுமல்லாமல் மெல்போர்னிலும் வென்றது”

- Advertisement -

“குறிப்பாக 36க்கு அவுட்டான பின் மெல்போர்னில் வென்ற இந்தியா சிட்னியில் போராடி தோல்வியை தவிர்த்தது. ஒருவேளை அந்த போட்டியிலும் ரிசப் பண்ட் நின்று விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும். ஆனால் அந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய இளம் வீரர்கள் காட்டிய தைரியம், சகிப்புத்தன்மை, துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை இந்த இங்கிலாந்து தொடரிலும் தெரிந்தது”

இதையும் படிங்க: என்னது தோனிக்கு இது கடைசி சீசனா? கிடையவே கிடையாது.. அவரது நண்பர் அளித்த பதில் – விவரம் இதோ

“அதனால் தான் இந்தியா வெல்வதற்கு எப்போதும் பெரிய வீரர்கள் தேவையில்லை என்று நான் சொல்வேன். எனவே இங்கு நான் இல்லாமல் இந்திய அணி இல்லை என்று நினைக்கும் பெரிய வீரர்களுக்கு நீங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் நாங்கள் வெல்வோம் என்பதை இந்த 2 தொடர்களும் காட்டியுள்ளது. இதற்கான பாராட்டுக்கள் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அடங்கிய அணி நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டும். இந்த தொடர் நம்மிடம் பெரிய வீரர்கள் இல்லாவிட்டாலும் உறுதியான மனம் கொண்ட வீரர்கள் இருந்தால் வெல்ல முடியும் என்பதை காண்பித்துள்ளது” என்று கூறினார்.

Advertisement