என்னது தோனிக்கு இது கடைசி சீசனா? கிடையவே கிடையாது.. அவரது நண்பர் அளித்த பதில் – விவரம் இதோ

Paramjith
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இதுவரை நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர்களில் மும்பை மற்றும் சென்னை அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகளாக திகழ்கின்றன.

அதிலும் குறிப்பாக சென்னை அணியானது 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கடைசி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் களமிறங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்து வந்த வேளையில் கடந்த ஆண்டு இறுதியில் தோனி ரசிகர்களின் அன்பிற்கும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் அவரது ஓய்வு குறித்து பலராலும் பல்வேறு கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரான பரம்ஜித் சிங் அளித்துள்ள ஒரு கருத்து தற்போது சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பரம்ஜித் சிங் கூறுகையில் : வரவிருக்கும் 2024 ஐபிஎல் சீசனுக்கு பிறகு தோனி ஓய்வுபெற வாய்ப்பு இல்லை. இன்னும் ஒன்று அல்லது இரண்டு சீசன்களில் விளையாடும் அளவிற்கு அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார். தோனி நிச்சயம் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் அதற்கு காரணம் அவருடைய மிகச்சிறந்த உடற்தகுதி தான் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2023 தொடருடன் சர்பராஸ் கானை கழற்றி விட்டது ஏன்? டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி விளக்கம்

அதேபோன்று தோனி அளித்துள்ள ஒரு பழைய பேட்டியில் : எங்கள் அணிக்கு கிடைத்த நல்ல ரசிகர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சென்னை அணியின் ரசிகர்களும் சிறந்த நிர்வாகமும் தான் பல ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக நிச்சயம் தோனி இன்னும் சில ஆண்டுகள் விளையாட வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement