ஐபிஎல் 2023 தொடருடன் சர்பராஸ் கானை கழற்றி விட்டது ஏன்? டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி விளக்கம்

Sourav Ganguly 9
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர் சர்பராஸ் கான் ஒரு வழியாக இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமானார். மும்பையைச் சேர்ந்த அவர் சமீபத்திய வருடங்களாகவே ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து பெரிய ரன்கள் அடித்து வந்தார். இருப்பினும் சீனியர்கள் இருந்ததால் வாய்ப்பு பெறாமல் தவித்து வந்த அவர் நீண்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து தொடரில் அறிமுகமாக களமிறங்கினார்.

அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனை சமன் செய்தார். அத்துடன் 62, 68 ரன்கள் அடித்த அவர் அறிமுக டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் அரை சதங்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையுடன் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

கங்குலி விளக்கம்:
அதன் காரணமாக ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் விலை போகாத அவரை சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் தற்போது வாங்குவதற்கு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டிலேயே விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் அறிமுகமான சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடத் தடுமாறினார்.

அதனால் அந்த அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார். அந்த அணியிலும் பெரிய வாய்ப்பை பெறாத அவரை 2022 சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வாங்கியது. அங்கேயும் கொடுக்கப்பட்ட ஓரிரு வாய்ப்புகளிலும் அசத்த தவறியதால் 2023 சீசனுடன் டெல்லி அணியும் அவரை கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் சர்பராஸ் கான் டி20 கிரிக்கெட்டுக்கு பொருந்த மாட்டார் என்பதை உணர்ந்ததாலேயே விடுவித்ததாக டெல்லி அணியின் இயக்குனர் மற்றும் ஜாம்பவான் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சர்பாராஸ் கான் 5 நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கு அதிகம் பொருந்தக்கூடிய வீரர். அந்த வகையான போட்டிகளில் உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் அடித்துள்ள ரன்கள் அபாரமானதாக இருக்கிறது. அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் அடித்த ரன்கள் வீண் போகாது என்று சொல்வார்கள். அது அவருடைய விஷயத்தில் சரியாக நடந்துள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: உலகக் கோப்பையிலேயே பாத்தேன்.. அந்த சிஎஸ்கே வீரர் சூப்பர்ஸ்டாரா வருவாரு.. நேதன் லயன் பாராட்டு

அவர் கூறுவது போல சர்பராஸ் கான் 47 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் 4056 ரன்களை 68.74 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். ஆனால் 50 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 37 இன்னிங்ஸில் வெறும் 585 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து 3 – 1* என்ற கணக்கில் தொடரை வென்றுள்ள இந்தியா மார்ச் 7ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் களமிறங்க உள்ளது.

Advertisement