உலகக் கோப்பையிலேயே பாத்தேன்.. அந்த சிஎஸ்கே வீரர் சூப்பர்ஸ்டாரா வருவாரு.. நேதன் லயன் பாராட்டு

Nathan Lyon 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோர் தற்சமயத்தில் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன்களாக கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு அடுத்தபடியாக வருங்காலங்களில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பதற்காக உலகின் பல்வேறு அணிகளிலும் நிறைய தரமான வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் வருங்காலத்தில் இந்தியாவுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு தரமான வீரர்களாக தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நியூசிலாந்து அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக 24 வயதாகும் ரச்சின் ரவீந்திரா செயல்பட்டு வருகிறார் என்றே சொல்லலாம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர் கடந்த 2023 உலகக் கோப்பையில் 565 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

வருங்கால சூப்பர்ஸ்டார்:
அதன் வாயிலாக அறிமுக உலகக் கோப்பையிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை அவர் உடைத்தார். அதன் காரணமாக 2024 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ரச்சின் ரவீந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது வெலிங்டனில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 369 ரன்களை சேசிங் செய்யும் நியூசிலாந்தின் வெற்றிக்கு மூன்றாவது நாள் முடிவில் 56* ரன்களுடன் ரச்சின் ரவீந்திரா போராடி வருகிறார். அப்போட்டியில் முதல் முறையாக அவருக்கு எதிராக பந்து வீசியதிலிருந்தே ரச்சின் ரவீந்தரா வருங்கால சூப்பர்ஸ்டாராக வருவார் என்று உணர்ந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் நேதன் லயன் கூறியுள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த மிகவும் தரமான சுழல் பந்து வீச்சாளரான அவர் ரச்சின் ரவீந்தராவை பற்றி பேசியுள்ளது பின்வருமாறு. “உண்மையாக ரச்சின் நல்ல வீரராக தெரிகிறார். இந்த போட்டியில் தான் அவருக்கு எதிராக முதல் முறையாக நான் பந்து வீசினேன். கடந்த உலகக் கோப்பையின் போது அவருடைய ஆட்டத்தை நான் பார்த்துள்ளேன்”

இதையும் படிங்க: பாகிஸ்தானை விட இந்தியாவே முக்கியம்.. பாதியிலேயே வெளியேறிய கைரன் பொல்லார்ட்.. பிஎஸ்எல் ரசிகர்கள் அதிருப்தி

“அவர் சூப்பர் ஸ்டார் வீரராக வருவார். ஆனால் தற்சமயத்தில் நாங்கள் நியூசிலாந்தின் மீது தடுப்பாட்டத்தை நீண்ட நேரம் போட்டால் அவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைத்து வெற்றி காண முடியும் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறினார். இந்த நிலையில் அப்போட்டியில் 111/3 ரன்களுடன் விளையாடி வரும் நியூசிலாந்தின் வெற்றிக்கு 4வது நாளில் 258 ரன்கள் தேவைப்படுகிறது. அதை சேசிங் செய்வதற்கு ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ள ரச்சின் ரவீந்தரா மற்றும் டார்ல் மிட்சேல் களத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement