சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்தியா வந்தடைந்து அந்த அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தாலும் ஐ.பி.எல் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே நாடு திரும்பினார்.
சன் ரைசர்ஸ் அணிக்கு திரும்பும் பேட் கம்மின்ஸ் :
மேலும் அவரது காயம் சற்று தீவிரமாக இருந்ததால் இந்த 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளை அவர் தவறவிடுவார் என்றும் சன் ரைசர்ஸ் அணியின் நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்பின்னர் சன் ரைசர்ஸ் அணியின் தற்காலிக கேப்டனாக இஷான் கிஷனும், துணை கேப்டனாக இளம்வீரர் அபிஷேக் சர்மாவும் நியமிக்கப்பட்டனர்.
அதன்படியே தற்போது ஆரம்பகட்ட போட்டிகளில் இஷான் கிஷன் தலைமையில் சன் ரைசர்ஸ் அணி விளையாடி வரும் நிலையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் இரண்டு வெற்றிகளை பெற்று நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கின்றனர். அதோடு எதிர்பார்த்த அளவிற்கு அந்த அணியின் செயல்பாடு திருப்திகரமாகவே இருந்து வருகிறது.
இருந்தாலும் பேட் கம்மின்ஸ் எப்போது மீண்டும் சன் ரைசர்ஸ் அணிக்கு திரும்புவார்? என்று அந்த அணியின் நிர்வாகமும், ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் பேட் கம்மின்ஸ் எப்போது அந்த அணிக்கு திரும்புகிறார்? என்பது குறித்த உறுதியான தகவல் ஒன்று வெளியாகி அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? அவர் இல்லனா யார் ஆடுவாங்க? – விவரம் இதோ
அந்த வகையில் நாளை ஏப்ரல் 17-ஆம் தேதி பேட் கம்மின்ஸ் ஹைதராபாத்தில் அந்த அணியுடன் இணைவார் என்று கூறப்படுகிறது. அதோடு ஏப்ரல் 18-ஆம் தேதி அவர்களது சொந்த மைதானத்தில் நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



