இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? அவர் இல்லனா யார் ஆடுவாங்க? – விவரம் இதோ

Rohit Sharma
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி ஞாயிறுக்கிழமை அன்று நடைபெற்ற 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பை சந்தித்தார். இதன் காரணமாக 19 ரன்கள் எடுத்திருந்த அவர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் அந்த போட்டியிலிருந்து வெளியேறியிருந்தார். அதனை தொடர்ந்து அந்த போட்டியில் அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வரவில்லை.

ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடுவாரா? :

இதன் காரணமாக ரோகித் சர்மா அந்த போட்டியில் காயமடைந்தது உறுதியானது. அதனை தொடர்ந்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது ஏப்ரல் 16-ஆம் தேதியான இன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 24-ஆவது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் வலைப்பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான இன்று நடைபெறும் முக்கிய லீக் போட்டியை அவர் தவறவிடுவார் என்றும் தெரிகிறது.

ஒருவேளை அப்படி ரோஹித் சர்மா இன்றைய போட்டியினை தவறவிட்டால் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக யார் களமிறங்குவார்கள்? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக குவிண்டன் டி காக் விளையாட வாய்ப்புள்ளது. அப்படி டி காக் வந்தால் மிட்சல் சான்ட்னர் அல்லது டிரெண்ட் போல்ட் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : இம்பேக்ட் வீரராக வந்தும் அசத்திய கிங் கோலி.. நடப்பு தொடரின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தல் – விவரம் இதோ

அவரை தவிர்த்து மற்ற இரண்டு மாற்று வீரர்களாக விதர்பா அணிக்காக முதல்தர போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேனிஷ் மலேவர் அல்லது ஜார்கண்ட் அணிக்காக விளையாடி வரும் ராபின் மின்ஸ் ஆகிய இருவரில் ஒருவர் துவக்க வீரராக விளையாடலாம் என்று தெரிகிறது.

Advertisement