கோலி பற்றி நான் அப்படி சொல்லவே இல்லங்க..! அந்தர் பல்டி அடித்த ஆஸ்திரேலியா வீரர்..! – விவரம் உள்ளே

kohli
Advertisement

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பின்னர் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் ட்ரொபி தொடரில் இந்திய அணியின் கேப்டன் ஒரு சதத்தை கூட அடிக்க மாட்டார் என்று ஆஸ்திரேலிய அணியின் இளம் பந்து வீச்சாளர் பேட் கும்மின் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது தான் எதற்காக கோலியை பற்றி அப்படி கூறினேன் என்று விளக்கமளித்துள்ளார்.
Virat-Kohli
வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளும் அடங்கும் . இந்த தொடரில் இந்திய அணியின் விராட் கோலி சதமடிக்க வாய்ப்பில்லை என ஆஸ்திரேலிய அணியின் இளம் பந்து வீச்சாளர் பேட் கும்மின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து மீண்டும் விளக்கமளித்துள்ள பேட் கும்மின் ” நான் கோலி பற்றி கூறிய கருத்து இந்த அளவிற்கு ஒரு சர்ச்சையாக மாறும் என்று நான் நினைக்கவில்லை. கண்டிப்பாக இந்திய அணிக்கு கோலி மிகவும் முக்கியமான வீரர். அவரை குறை கூறும் விதமாக நான் எதையும் குறிப்பிடவில்லை. அவர் சிறப்பாக ஆடிவிட்டால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி சிரமமாக இருக்கும். எனவே அவரை வீழ்த்துவது மிகவும் முக்கியம் என்று அவரை பெருமைப்படுத்தும் விதமாகவே கூறினேன் ” என்று தெரிவித்துள்ளார்.
PatCummins
ஏற்கனவே பேட் கும்மின் கூறிய கருத்தை மறுத்து பேசி இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ” கோலியிடம் அவரை பற்றி நிரூபிக்க நிறைய விடயங்கள் உள்ளது. அவர் தான் ஏன் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதை இந்த வருடமும் நிரூபிப்பார். அவர் கண்டிப்பாக சதம் அடிப்பார். ஏனெனில் அவரை போல ரன் எடுக்கும் தாகத்தை கொண்ட ஒரு பேட்ஸ்மேனை பார்த்தது இல்லை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Advertisement