ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு. ஆனா அது ஸ்டீவ் ஸ்மித் கிடையாது – புதிய கேப்டன் இவர்தான்

cummins
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வரும் டிசம்பர் 8-ஆம் தேதி துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடருக்காக தயாராகி வந்த நிலையில் தன் மீது எழுப்பப்பட்ட பாலியல் புகார் காரணமாக தனது டெஸ்ட் கேப்டன் பதவியை டிம் பெய்ன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தானாக முன்வந்து ராஜினாமா செய்தார்.

Paine

மேலும் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அவர் இனியும் அணியின் நற்பெயருக்கு என்னால் எவ்வித இழுக்கும் வேண்டாம் என்று தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவரது இந்த பதவி விலகலை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் நிர்வாகம் புதிய டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

- Advertisement -

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர்கள் ஸ்மித் (அ) வார்னர் ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர்களுக்கு பதவியை அளிக்காமல் பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஒருமனதாக அவர்கள் ஒரு முடிவுக்கு தற்போது புதிய கேப்டனை ஆஸ்திரேலிய நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

PatCummins

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் புதிய டெஸ்ட் கேப்டனாக அறிவிப்பட்டுள்ளார். 28 வயதான கம்மின்ஸ் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அறிமுகப்போட்டியிலேயே அபாரமான சதம் அடித்து பல சாதனைகளை தன்வசப்படுத்திய – ஷ்ரேயாஸ் ஐயர்

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் துணை கேப்டனாக பணிபுரிந்த அனுபவம் உடைய பேட் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிகாரபூர்வ டெஸ்ட் கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement