அறிமுகப்போட்டியிலேயே அபாரமான சதம் அடித்து பல சாதனைகளை தன்வசப்படுத்திய – ஷ்ரேயாஸ் ஐயர்

Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்று கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்து இருந்தது.

iyer 3

- Advertisement -

ஷ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் மேலும் ரன்களைக் குவிக்க முடியாமல் ஜடேஜா 50 ரன்களிலேயே சவுதி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் சாஹாவும் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இவ்வேளையில் அதிரடியாக ஆடிய ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே தனது சதத்தை தற்போது பூர்த்தி செய்து அசத்தியுள்ளார்.

இன்று காலை முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் எவ்வித சிக்கலும் இன்றி தனது முதலாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். மேலும் அவர் அடித்த இந்த சதத்தில் பல்வேறு சிறப்பான விஷயங்கள் உள்ளன. அந்த விடயங்கள் பின்வருமாறு : அறிமுக போட்டியிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் கண்ட 16 ஆவது இந்திய வீரராக ஷ்ரேயாஸ் அய்யர் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

iyer 1

அதோடு நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கிய சதமடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 வயது 355 ஆவது நாளில் தனது அறிமுக போட்டியில் விளையாடி உள்ளார். மேலும் அறிமுக போட்டியிலேயே வேகமாக சதம் அடித்தவர் பட்டியலிலும் இவர் 4-வது வீரராக இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழக வீரர் ஷாருக் கானிடம் உள்ள இந்த திறமை வேறு யாரிடமும் இல்லை – வாசிம் ஜாபர் ஓபனடாக்
இந்த முதல் இன்னிங்சில் 171 பந்துகளை சந்தித்த ஷ்ரேயாஸ் ஐயர் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 105 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement