தமிழக வீரர் ஷாருக் கானிடம் உள்ள இந்த திறமை வேறு யாரிடமும் இல்லை – வாசிம் ஜாபர் ஓபனடாக்

Jaffer
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி கர்நாடக அணியை வீழ்த்தி மீண்டும் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற முக்கிய காரணமாக ஷாருக்கான் திகழ்ந்தார். 6 ஆவது வீரராக களமிறங்கிய அவர் 15 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என 33 ரன்கள் அடிக்க தமிழ்நாடு அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற போது சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Shahrukh

- Advertisement -

இதன் காரணமாக தற்போது ஷாருக் கானுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் வேளையில் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான வாசிம் ஜாபர் அவரது பேட்டிங் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியாவில் ஏகப்பட்ட திறமையான இளம் வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் டாப் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று எண்ணம் உடையவர்கள்.

ஆனால் பின்வரிசையில் அதாவது ஆறாவது, ஏழாவது இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணம் மற்றும் திறமை ஒருசில வீரர்களிடம் மட்டுமே உள்ளது. அந்த வகையில் ஷாருக்கான் பின்வரிசையில் விளையாட திறமையான வீரர். இவரைப் போன்ற ஒரு வீரர் கிடைப்பது மிகவும் அரிது. அதுமட்டுமின்றி பின்வரிசையில் விளையாடும் வீரர்களுக்கு பவர் மற்றும் சிக்ஸ் ஹிட்டிங் எபிலிட்டி அதிகமாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஷாருக்கான் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் பந்தினைக்கூட எளிதாக சிக்சர் அடிக்கிறார்.

shahrukhan

அதுமட்டுமின்றி 14, 15 ஓவர்களில் இறங்கும் இவர் அதிரடியாக விளையாடுகிறார். இவர் இப்படியே சிறப்பாக ஆடும் பட்சத்தில் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார். டி20 அணியில் மட்டுமல்ல இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாட இவர் ஒரு தகுதியான நபர் தான். நிச்சயம் ஷாருக்கான் ஒரு ஸ்பெஷல் பிளேயர் என வாசிம் ஜாபர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி 5 இன்னிங்ஸ்களில் ஜடேஜா செய்துள்ள சிறப்பான தரமான சம்பவம் – இது தெரியுமா உங்களுக்கு ?

ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக நாங்கள் கொடுக்கும் அறிவுரைகளை நன்றாக கவனிக்கிறார். அது மட்டுமின்றி அதனை வலைப்பயிற்சியில் பயிற்சி செய்தும் பார்க்கிறார். ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய பவுலர்களுக்கு எதிராகவும் சிக்ஸ் அடிக்கும் பலம் அவரிடம் உள்ளது. நிச்சயம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement