கடைசி 5 இன்னிங்ஸ்களில் ஜடேஜா செய்துள்ள சிறப்பான தரமான சம்பவம் – இது தெரியுமா உங்களுக்கு ?

Jadeja

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் குவித்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஷ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

iyer 3

அவர்களை தவிர சுப்மன் கில் 52 ரன்களும், ரஹானே 35, புஜாரா 26 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்த முதலாவது இன்னிங்சில் 145 ரன்கள் இருக்கும்போது ரகானே ஆட்டமிழந்து வெளியேறியதும் ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து மேலும் விக்கெட்டுகளை விடாமல் முதல் நாளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

- Advertisement -

இவர்களது பார்ட்னர்ஷிப் தற்போது 113 ரன்கள் குவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த முதல் இன்னிங்சில் ஜடேஜா அடித்த அரைசதமானது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த 17-ஆவது அரைசதமாக அமைந்தது மட்டுமின்றி மற்றுமொரு முக்கியமான சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

Jadeja 1

அதன்படி இந்திய மண்ணில் கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் இன்னிங்சில் 4 அரைசதங்கள் குவித்துள்ளார். கடைசியாக ஜடேஜா இந்திய மண்ணில் விளையாடியுள்ள ஐந்து இன்னிங்ஸ்களின் ஸ்கோர் இதோ ( 91, 51, 60*, 12, 50* ) இதில் நான்கு முறை அவர் அரை சதத்தை கடந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் எங்கயோ போகப்போறாரு. அதிலும் வெளிநாடுகளில் அசத்துவாரு – இர்பான் பதான் பேட்டி

கடந்த சில ஆண்டுகளாகவே தனது பேட்டிங்கில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் ஜடேஜா இந்த போட்டியிலும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement