டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் எங்கயோ போகப்போறாரு. அதிலும் வெளிநாடுகளில் அசத்துவாரு – இர்பான் பதான் பேட்டி

pathan 1
- Advertisement -

தற்போதைய இந்திய அணியானது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் பலமான அணியாக திகழ்கிறது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணி இந்திய மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரை விட அந்நிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக அடுத்தடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய அணியானது இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.

IND 1

மேலும் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் என எங்கு சென்றாலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி வருகிறது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 11 வீரர்களும் சிறப்பாக விளையாடுவதால் தொடர்ச்சியான ஆதிக்கத்தை வெளிக்காட்டி வருகிறது. இப்படி இந்திய அணியின் வெளிநாட்டு ஆதிக்கம் அடுத்து வர இருக்கும் தென்னாப்பிரிக்க தொடரிலும் தொடரும் என்பது உறுதி. அந்த அளவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பலமான அணியாக இருக்கிறது.

- Advertisement -

அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி அங்கும் சிறப்பான வெற்றியை மீண்டும் குவிக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் டெஸ்ட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் இன்னும் முதிர்ச்சியான வீரராக மாறுவார் என்றும் இந்திய அணியின் முக்கிய வீரராக அவர் திகழ்வார் என்றும் கூறியுள்ளார்.

gill

இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையிலேயே நான் கில்லை மிகவும் நம்புகிறேன். அவர் ஒரு திறமையான இளம்வீரர். நிச்சயம் அவர் இந்திய அணியின் முக்கிய வீரராக இனிவரும் காலங்களில் மாறுவார். அதிலும் குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில் அவரது ஆட்டம் பிரமாதமாக அமையப்போகின்றது ஏனெனில் சற்றே உயரம் அதிகமான அவர் மிக பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். வேகப்பந்து வீச்சாளர்களை இறங்கி வந்து ஆடுகிறார். ஸ்பின்னர்களை லேட்டாக ஆடுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : குடுத்துச்சவரு நீங்க. எப்பேர்ப்பட்ட வாய்ப்பு கலக்குங்க – ஷ்ரேயாஸ் ஐயரை வாழ்த்திய தினேஷ் கார்த்திக்

அவரால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலைத்து நின்று பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும் அந்த தகுதி அவரிடம் உள்ளது. எனவே இனிவரும் டெஸ்ட் தொடர்களில் நிச்சயம் இந்திய அணியின் முக்கிய வீரராக கில் திகழ்வார் என்று புகழாரம் சூட்டினார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 52 ரன்கள் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement