குடுத்துச்சவரு நீங்க. எப்பேர்ப்பட்ட வாய்ப்பு கலக்குங்க – ஷ்ரேயாஸ் ஐயரை வாழ்த்திய தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று கான்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தற்போது இந்திய அணியானது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார். விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருப்பதன் காரணமாக இந்த அறிமுக வாய்ப்பானது ஷ்ரேயாஸ் ஐயருக்கு கிடைத்துள்ளது.

இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 303-வது வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக தொப்பியினை முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கையில் பெற்றுக்கொண்டார். அந்த நிகழ்வினை வீடியோவாக எடுத்து பிசிசிஐ தற்போது தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த விடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயரின் இந்த அறிமுகத்திற்கு பல்வேறு வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் வீரரான தினேஷ் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட ஒருவர். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான சுனில் கவாஸ்கரிடமிருந்து உங்களுக்கு அறிமுக தொப்பி கிடைத்துள்ளது.

முதல்தர கிரிக்கெட்டில் நீங்கள் சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ளீர்கள். நிச்சயம் உங்களது படெஸ்ட் கரியரும் சிறப்பாக இருக்கும். நன்றாக விளையாடுங்கள் என்று தனது கருத்தினை அவர் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : முதல்நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷத்தை எழுப்பிய ரசிகர்கள் – மைதானத்தில் நடந்தது என்ன?

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 136 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்த அவருக்கு வாழ்த்துக்கள் தற்போது குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement