முதல்நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷத்தை எழுப்பிய ரசிகர்கள் – மைதானத்தில் நடந்தது என்ன?

Fans
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை குவித்துள்ளது.

இந்திய அணி சார்பாக ஷ்ரேயாஸ் அய்யர் 75 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மற்றபடி சுப்மன் கில் 52 ரன்களும், ரஹானே 35 ரன்களும், புஜாரா 26 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

இந்த ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 6 ஆவது ஓவரில் அந்த சம்பவம் நடைபெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் நாம் இந்த போட்டியில் வென்று விடுவோம் என ஹிந்தியில் கோஷம் எழுப்பினர்.

ஆனால் கூட்டத்தில் இருந்த சில ரசிகர்கள் பாகிஸ்தான் ஒழிக என்று கோஷம் எழுப்ப அது மற்றவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. பின்னர் ஒவ்வொருவராக பாகிஸ்தான் ஒழிக என்று எழுப்பியதால் கூடி இருந்த மொத்த கூட்டமும் அவர்களை பின் தொடர்ந்து பாகிஸ்தான் ஒழிக என்று “பாகிஸ்தான் முரதாபாத்” என கோஷம் எழுப்பியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனி அப்போ சொன்ன டிப்ஸ் தான் இப்போ நான் போட்டியை முடிக்க உதவியது – மனம்திறந்த ஷாருக்கான்

டி20 உலககோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்த போது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கிண்டல் செய்த காரணத்தினாலேயே பாகிஸ்தானை தற்போது இந்திய ரசிகர்கள் விமர்சித்து கோஷம் எழுப்பியதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement