
இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வந்தது. குறிப்பாக 2023 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா 11 வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு சென்று தோற்றது. அந்த வேதனையான தோல்வியால் மனம் தளராத ரோஹித் சர்மா சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற புதிய அணுகுமுறையை உருவாக்கினார்.
அந்த அணுகு முறையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அடுத்தடுத்த 2 ஐசிசி கோப்பைகளை இந்தியா அவருடைய தலைமையில் வென்று சாதனை படைத்தது. அதனால் 2027 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா இந்தியாவை தலைமைத் தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 40 வயதில் அவரால் சாதிக்க முடியுமா என்று தேர்வுக்குழு சந்தேகிக்கிறது.
அதனால் இப்போதே அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளது. அதன் காரணமாக 2027 உலகக்கோப்பையில் 40 வயதில் ரோஹித் சர்மா விளையாட வேண்டுமெனில் தன்னை ஃபிட்டாக ஃபார்மில் வைத்துக்கொள்வது அவசியமென்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்குப்பின் ரோஹித் சர்மா கடினமாக உழைத்து தம்முடைய உடல் எடையை 10 கிலோ குறைத்துள்ளதாக பர்வின் ஆம்ரே கூறியுள்ளார்.
இந்தியாவுக்காக 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ரோஹித் சர்மா கடினமாக உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தற்போது இந்திய அணியின் மூத்த வீரராக இருக்கும் ரோஹித் அதற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும்”
“அணி நிர்வாகமும் அவருக்கு போதுமான நேரத்தை வழங்கி மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்யும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். ரோஹித் எந்தளவு மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்கிறாரோ அந்தளவு மேட்ச் வின்னராக வருவார். தற்போது கேப்டன்ஷிப் பொறுப்பும் இல்லாததால் நாம் அவரை மேட்ச் வின்னராக பார்க்க விரும்புகிறோம். அதைச் செய்வதற்கு தகுதியான அவர் பிகேசி’யில் பயிற்சிகளை எடுத்தார்”
இதையும் படிங்க: விராட், ரோஹித் போகட்டும் விடுங்க.. அவங்களோட ஃபெர்பார்மன்ஸை பாருங்க.. அகர்கர் பாராட்டு
“அவரைப் பார்த்த போது நான் ஃபிட்டான உடல் ஃபிட்டான மனநிலையைக் கொண்டிருக்கும் என்று அவரிடம் சொன்னேன். அதற்காக 6 மாதங்கள் கடினமாக உழைத்த ரோஹித் 10 கிலோ எடை குறைத்துள்ளார். இனிமேல் அவர் ஒரு தொடரில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாத அவரை மகிழ்ச்சியுடன் விளையாட விடுங்கள்” என்று கூறினார்.