ஹைதெராபாத்லயே அப்டினா.. இங்க இங்கிலாந்து சிதறடிச்சுருவாங்க.. இந்திய அணியை எச்சரித்த பார்த்திவ் படேல்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலையில் வகிக்கிறது. அதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கிய இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்த உதவியுடன் 396 ரன்கள் எடுத்தது.

அதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்சில் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்கள் எடுத்தார். அதன் பின் 143 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் போராடி 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

கவனம் தேவை:
அதிகபட்சமாக சுப்மன் கில் 104 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்களை எடுத்தார். இறுதியில் 399 என்ற பெரிய இலக்கை துரத்தும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 67/1 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் கைவசம் 9 விக்கெட்டுகளை வைத்துள்ள அந்த அணிக்கு களத்தில் ஜாக் கிராவ்லி 29* ரெஹன் அஹமத் 9* ரன்களுடன் உள்ளனர்.

இதற்கு முன் இந்திய மண்ணில் 387க்கும் மேற்பட்ட இலக்கை எந்த அணியும் சேசிங் செய்து வென்றதில்லை. மேலும் 4, 5வது நாளில் பிட்ச் பேட்டிங்க்கு சவாலாக மாறும் என்பதால் இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் முதல் போட்டியில் ஹைதெராபாத்தில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் இங்கிலாந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 164/5 என சரிந்தும் பின்னர் 423 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்ததாக பார்திவ் படேல் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே பேட்டிங்க்கு ஓரளவு சாதகமாக இருக்கும் விசாகப்பட்டினம் பிட்ச்சில் 322 ரன்களை 4வது அடித்து இங்கிலாந்து வெல்வதற்கு வாய்ப்புள்ளதால் இந்தியா கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “அவர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஜாக் கிராவ்லி தற்போது களத்தில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார்”

இதையும் படிங்க: ரொம்ப தேங்க்ஸ் தம்பி.. என் பெயரை காப்பாத்திட்டீங்க.. கில்லுக்கு நன்றி சொன்ன பீட்டர்சன்.. காரணம் என்ன?

“எனவே இங்கிருந்து இங்கிலாந்து 332 ரன்களை எடுத்து வெல்வதற்கு கண்டிப்பாக வாய்ப்புள்ளது. ஏனெனில் இங்கிலாந்தின் பேட்டிங் ஃபார்ம் நன்றாக உள்ளது. மற்றொன்று ஹைதராபாத்தில் மோசமான பிட்ச்சில் கூட அவர்கள் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்தினர். எனவே இந்த சேசிங்கை வெற்றிகரமாக முடிப்பதற்கான திறமையான பேட்டிங் இங்கிலாந்திடம் இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement