விராட் கோலி துவக்க வீரராக களமிறங்கினால் நிச்சயம் அந்த விஷயம் நடக்கும் – பார்த்திவ் படேல் கருத்து

Virat Kohli 122
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் சமூக வலைதளம் மூலமாக எழுந்து வருகின்றன. அதே வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் திட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், அணி எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் டி20 உலக கோப்பையில் விராட் கோலி துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : ஆசிய கோப்பையில் விராட் கோலி துவக்க வீரராக களம் இறங்கியது போலவே டி20 உலக கோப்பையிலும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும்.

ஏனெனில் அவர் துவக்க வீரராக களம் இறங்கினால் அணி சமநிலை அடையும். ரோகித்துடன் அவர் களமிறங்கும் போது இரு வெவ்வேறு வித்தியாசமான வீரர்கள் ஒன்றாக விளையாடும் ஒரு வாய்ப்பு இருக்கும். ரோஹித் துவக்கத்திலேயே அதிரடியாக ஆடக்கூடியவர். அதேவேளையில் கோலி இடைவெளிகளை கண்டுபிடித்து பவுண்டரிகளை அடிக்கும் அற்புதமான வீரர்.

VIrat Kohli IND vs HK

இப்படி கோலியும் ரோகித்தும் சிறப்பாக துவங்கும் பட்சத்தில் முதல் ஆறு ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய மைதானத்தில் கூட அவர்களால் 50 ரன்களை அடிக்க முடியும். அப்படி துவக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் பின்னால் வரும் வீரர்கள் மிகப்பெரிய ரன்களுக்கு கொண்டு செல்லவும் அது உதவும்.

- Advertisement -

இதையும் படிங்க : பாபர் அசாம்கிட்ட முன்னாடி சொன்ன அவருதான் கேக்கல. தப்பு பண்ணிட்டாரு – கம்ரான் அக்மல் ஓபன்டாக்

என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் நன்றாக விளையாடக்கூடிய விராட் கோலி துவக்க வீரராக களம் இறங்கினால் நிச்சயம் இந்திய அணிக்கு அந்த யுக்தி பல வெற்றிகளை பெற்று தரும் என்பது உறுதி. அதோடு அணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் முதல் ஆறு ஓவர்கள் பேட்டிங் செய்வது நல்லது என்றும் பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement