பாபர் அசாம்கிட்ட முன்னாடி சொன்ன அவருதான் கேக்கல. தப்பு பண்ணிட்டாரு – கம்ரான் அக்மல் ஓபன்டாக்

Kamran
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டனான பாபர் அசாம் கடந்த 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகி இதுவரை 92 ஒருநாள் போட்டிகள், 42 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் அணியிலேயே மிகச்சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் வெகுவிரமாக பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து படிப்படியாக தனது முன்னேற்றத்தைக் கண்ட பாபர் அசாம் தற்போது மாடன் டே கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

babar azam 1

- Advertisement -

அதோடு விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் வரிசையிலும் பாபர் அசாம் மதிப்பிடப்பட்டு வருகிறார். இப்படி மிகச் சிறப்பான வீரராக மாறியிருக்கும் பாபர் அசாம் சமீப காலமாக கேப்டன்சி அழுத்தத்தால் அவரது பேட்டிங்கிலும் சரியாக சோபிக்க முடியாமல் இருந்து வருவது வெளிப்படையாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வலுவான அணியாக காணப்பட்டாலும் தொடர்ச்சியாக பாபர் அசாமின் பேட்டிங் மட்டும் சொதப்பலாக இருந்தது. அதோடு கேப்டன்சிலும் சற்று பின்னடைவை அவர் சந்தித்தார். உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் பாபர் அசாம் ஆசிய கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட 30 ரன்கள் தாண்டவில்லை. ஆனாலும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அவரே செயல்பட இருக்கிறார்.

azam-1

இந்நிலையில் பாபர் அசாமிற்கு கேப்டன்ஷிப் பதவி வழங்கப்பட்டது தான் அவரது இந்த பின்னடைவுக்கு காரணம் என பாகிஸ்தானின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே ஒரு முறை பைசலாபாத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது பாபர் அசாமிடம் டாஸ் போடும்போது பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நிறைய விடயங்களை பற்றி நான் அவருக்கு தெளிவுகளை வழங்கினேன்.

- Advertisement -

பின்னர் அவர் கேப்டனாக பதவி ஏற்க இருப்பது தெரிந்து தற்போது கேப்டன்சியை ஏற்க வேண்டாம். இது உங்களுக்கு சரியான நேரம் அல்ல என்று கூறினேன். மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகள் இன்னும் நீங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தால் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரராக நீங்கள் இருப்பீர்கள். அதோடு அணியும் உங்களைச் சார்ந்தது தான் இருக்கும். அப்பொழுது கேப்டன்சியை ஏற்றால் நீங்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படலாம்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு ஆபத்து இருக்கு – எச்சரித்த பார்த்திவ் படேல்

இன்னும் 30-40 சதங்கள் அடித்த பின் கேப்டன்சி பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் அதுதான் சரியான முடிவு என்று நான் கூறினேன். ஆனால் அவர் விரைவில் கேப்டன்சியை ஏற்றது தற்போது அவருக்கு பின்னடைவை தந்துள்ளதாக நினைக்கிறேன். மேலும் இந்த கேப்டன்சி பதவியை அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியும் அவர் எடுத்திருக்கலாம் என கம்ரான் அக்மல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement