டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு ஆபத்து இருக்கு – எச்சரித்த பார்த்திவ் படேல்

Parthiv-Patel
Advertisement

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடுவதால் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது.

Bhuvneswar Kumar INDIA

அந்த வகையில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்திய அணியின் தேர்வு குறித்தும், இந்திய அணியின் செயல்பாடு குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் இந்த டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி சந்திக்க இருக்கும் சவால் குறித்து தனது கருத்தினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்க வேண்டியது அவசியம்.

INDvsPAK

ஏனெனில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது துவக்கத்தில் சில போட்டிகளில் சொதப்பினால் கூட பின்னர் சரி செய்து கொள்ளலாம். ஆனால் டி20 உலக கோப்பையில் ஆரம்பத்தில் சொதப்பினால் மொத்தமாக நமது திட்டத்தின் மீது சந்தேகம் ஏற்படும். எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்று.

- Advertisement -

ஏற்கனவே அவர்கள் கடந்த ஆண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தினர். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பையிலும் ஒரு முறை இந்திய அணியை வீழ்த்தியுள்ளனர். எனவே பாகிஸ்தானை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலான காரியமாகவே இருக்கும். ஆனாலும் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி பலமாக இந்திய அணி தொடரினை துவங்க வேண்டும்.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை அணியில் தீபக் சாஹருக்கு இடம் கிடைக்காததற்கான 3 காரணங்கள் – விவரம் இதோ

அப்படி சிறப்பாக தொடரை தொடங்கினால் மட்டுமே அது இந்திய அணிக்கு நல்லது. எனவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது என பார்த்திவ் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement