டி20 உலககோப்பை அணியில் தீபக் சாஹருக்கு இடம் கிடைக்காததற்கான 3 காரணங்கள் – விவரம் இதோ

Deepak-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது ரோகித் சர்மா தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த 15 பேர் கொண்ட அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகர் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் மிகச் சிறப்பாக பந்து வீசும் தீபக் சாகர் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட்டெடுக்கும் திறமை கொண்டவர்.

Deepak-Chahar

- Advertisement -

அதோடு டி20 போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் பவுலராக பார்க்கப்படும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது சமூக வலைதளத்தில் விமர்சனத்தையும் சந்தித்தது. இந்நிலையில் இந்திய டி20 உலக கோப்பை அணியில் இருந்து தீபக் சாகருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கான மூன்று காரணங்களை இந்த பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம்.

1) சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட நாட்களாக விளையாடாதது : முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த தீபக் சாகர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த பல மாதங்களுக்கு விளையாட முடியாமல் ஓய்வில் இருந்தார். அதோடு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரையும் முழுவதுமாக தவறவிட்ட அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார்.

Deepak Chahar 1

பின்னர் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் ரிசர்வ் வீரராக இருந்த அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் அவரை நேரடியாக டி20 அணிக்குள் இணைக்காமல் ஸ்டான்ட் பை வீரராக இந்திய அணி இணைத்துள்ளது.

- Advertisement -

2) அர்ஷ்தீப் சிங்கின் வருகை : தீபக் சாகர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த வேளையில் ஐபிஎல் தொடரின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை அற்புதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஷ்தீப் சிங் சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக டெத் ஓவர்களில் மிகச் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க : உலகின் நம்பர் 1 பவுலருக்கே இப்படி ஒரு நிலையா? – முன்னாள் வீரர் சொன்ன உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி

இதன் காரணமாக டெத் ஓவர்களில் பந்து வீசும் முக்கிய பவுலராக அர்ஷ்தீப் சிங் தொடர்ச்சியாக இடம் பெற்று வருவதால் தீபக் சாகருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 3) போதிய அனுபவமின்மை : தீபக் சாகர் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் நான்கு ஆண்டுகளாக அவர் வெறும் 21 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

அதிலும் குறிப்பாக இவருக்கு இடையிடையே காயம் ஏற்படுவதால் அதிக தொடர்களை இவர் தவற விட்டுள்ளார். நான்கு வருடத்திற்கும் குறைவான அனுபவம் கொண்ட இவர் அதிக அளவிலான போட்டிகளை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்கிற காரணத்திற்காகவும் இவருக்கு உலகக்கோப்பை அணிக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement