ஷர்துல் அல்லது சிராஜ் ரெண்டு பேரில் ஒருவரை தூக்கிட்டு அந்த தம்பிக்கு ஒரு வாய்ப்பு குடுங்க – பார்த்திவ் படேல் பேட்டி

Parthiv
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி வீழ்த்தியது.

IND vs WI Shikhar Dhawan Nicholas Pooran

- Advertisement -

இப்படி அடுத்த அடுத்த இரண்டு வெற்றிகளின் மூலம் தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறது.

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வைட் வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது போட்டியில் அணியில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

Rohit Sharma Arshdeep Singh

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷர்துல் தாகூர் அல்லது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கிற்கு அறிமுக வாய்ப்பினை வழங்க வேண்டும்.

- Advertisement -

இந்திய அணியில் இளம் வீரரான அவரை நாம் விளையாட வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் அவர் அற்புதமாக செயல்படுவார் என்பதை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடியதை நாம் பார்க்கவில்லை. எனவே ஒருநாள் போட்டியில் அவரை விளையாட வைத்து 10 ஓவர்களையும் அவர் எப்படி வீசுகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : இந்திய வீரரால் 2000 கோடிகளை சம்பாதித்த ஆஸி கிரிக்கெட் வாரியம் – வெளியான அசத்தல் செய்தி

மேலும் இந்திய அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இருப்பது நமது அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும் என்பதனால் நாளைய போட்டியில் நிச்சயம் அவரை சேர்க்க வேண்டும் என பார்த்திவ் பட்டேல் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement