IND vs WI : எதிரணி ஈசியா கண்டுபிடிக்கிறாங்க, அந்த யுக்தியை மாற்றுங்க – ரோஹித்துக்கு முன்னாள் வீரர் வேண்டுகோள்

INDIA IND vs ENG Rohit Sharma
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அமெரிக்காவின் ப்ளோரிடாவில் ஆகஸ்ட் 6-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிரடி வெற்றி பெற்றது. 45 நிமிடங்கள் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 191/5 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 33 (16) சூர்யகுமார் யாதவ் 24 (15) தீபக் ஹூடா 21 (19) ரிஷப் பண்ட் 44 (31) சஞ்சு சாம்சன் 30* (23) அக்சர் படேல் 20* (8) என ஏறக்குறைய களமிறங்கிய அத்தனை பேட்ஸ்மேன்களும் கூட்டாக இணைந்து தேவையான ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

Rishabh Pant 44

- Advertisement -

அதை தொடர்ந்து 192 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணிக்கு ப்ரெண்டன் கிங் 13 (8) கெய்ல் மேயர்ஸ் 14 (16) டேவோன் தாமஸ் 1 (1) கேப்டன் நிக்கோலஸ் பூரன் 24 (8) ரோவ்மன் போவல் 24 (16) சிம்ரோன் ஹெட்மையர் 19 (19) ஜேசன் ஹோல்டர் 13 (9) என முக்கிய வீரர்கள் அனைவரும் 30 ரன்களை கூட தாண்டாமல் பொறுப்பின்றி ஆட்டமிழந்ததால் 19.1 ஓவரில் 132 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது.

கலக்கும் ரோஹித்:
இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த பெரிய வெற்றியால் 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை முன்னதாக இந்தியா கைப்பற்றியுள்ளது. மேலும் கடந்த 2021 டி20 உலககோப்பைக்குப் பின் பங்கேற்ற அனைத்து டி20 தொடர்களிலும் தோல்வியே அடையாமல் இந்தியா வெற்றி நடை போட்டு வருகிறது. முன்னதாக இந்த போட்டியில் 192 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு ப்ரெண்டன் கிங், தேவோன் தாமஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 22/2 என சுமாரான தொடக்கத்தை பெற்றது.

IND vs WI T20I

அப்போது களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் அக்ஷர் பட்டேல் வீசிய 5-வது ஓவரில் எரிமலையை போல் 4, 6, 0, 6, 6 என 5 பந்துகளில் 22 ரன்களை வெளுத்து வாங்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக கடைசி பந்தில் அவசரப்பட்ட அவர் ரன் அவுட்டானார். ஒருவேளை அவர் மட்டும் மேலும் சில ஓவர்கள் நின்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் பவர்பிளே ஓவர்களில் இதுபோல் சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டு வரும் ரோகித் சர்மா திட்டத்தை கிட்டதட்ட அனைத்து எதிரணிகளும் எளிதாக கண்டுபிடிப்பதாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

- Advertisement -

ஈசியா தெரிகிறது:
அதிலும் குறிப்பாக 4 அல்லது 5வது ஓவரின் போது சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் அவரின் யுக்தியை எதிரணிகள் தெரிந்து விட்டதால் அதற்கு பதிலாக இனிமேல் அர்ஷிதீப் சிங் போன்ற 3-வது வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப்பில் அந்த அம்சத்தை தொடர்ச்சியாக பார்க்க முடிகிறது. அதாவது 4 அல்லது 5-ஆவது ஓவரில் இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் பந்து வீசுகிறார்கள். ரவீந்திர ஜடேஜா விளையாடிய போதெல்லாம் அவர் 4 அல்லது 5வது ஓவரை வீசினார்”

Parthiv

“இன்று அக்சர் பட்டேல் அந்த இடத்தில் பந்து வீசினார். அனேகமாக அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் பந்து வீசியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் உள்ளே திரும்பக் கூடிய இன்ஸ்விங் யார்கர் பந்துகளை பிட்ச்சின் உதவியுடன் அற்புதமாக செயல்படுத்துகிறார். மேலும் ரிவர்ஸ் ஸ்விங் ஆவதற்காக பந்தை இந்திய அணி நல்ல முறையில் பயன்படுத்துகிறது. அதை நீங்கள் சரியாகச் செய்தால் போட்டியில் 20வது ஓவரில் கூட விக்கெட்டை எடுக்க முடியும். அந்த வகையில் இந்திய அணி பந்தை நல்ல முறையில் போட்டி முழுவதும் நிர்வகிக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பக்க வீக்கங்கள் காயம் காரணமாக இந்தியாவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் கடைசி 2 போட்டிகளிலிருந்து வெளியேறியுள்ளார். அது பற்றி பார்த்தீவ் பட்டேல் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : இது என்னடா புதுசா இருக்கு? அவருக்கு தான ஆட்டநாயகன் விருதை குடுத்திருக்கனும் – நேற்றைய போட்டியில் சம்பவம்

“பக்க வீக்கங்கள் காயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சவாலானது. ஏனெனில் அதிலிருந்து குணமடைய நிறைய நேரங்கள் தேவைப்படும் என்று நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன். ஒருமுறை அந்த காயத்தை சந்தித்து விட்டால் அதிலிருந்து வெளி வருவதற்கு நீண்ட நாட்களாகும்” என்று கூறினார். இத்தொடரின் கடைசி போட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதியான இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement