இது என்னடா புதுசா இருக்கு? அவருக்கு தான ஆட்டநாயகன் விருதை குடுத்திருக்கனும் – நேற்றைய போட்டியில் சம்பவம்

Avesh-Khan-2
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியானது நேற்று ப்ளோரிடோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியானது 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 191 ரன்களை குவிக்க பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Avesh Khan

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடாத ஆவேஷ் கான் பந்துவீச்சில் அதிக ரன்களை வாரி இறைத்ததால் அவர் நிச்சயம் நான்காவது போட்டியில் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்றைய போட்டியிலும் அவருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு அளித்த வேளையில் அவர் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருதினை வென்றது அனைவரையும் வியக்க வைத்தது. இருந்தாலும் நேற்றைய போட்டியில் ஆவேஷ் கானை காட்டிலும் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்து வீசினார் என்றும் அவருக்கே ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பேச்சு இருந்து வருகிறது.

Arshdeep Singh

ஏனெனில் நேற்றைய போட்டியில் 3.1 ஓவர்கள் பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நேற்றைய போட்டியில் மூன்று விக்கெட் வீழ்த்தியது மட்டுமின்றி குறைவான ரன்களையும் விட்டுக் கொடுத்ததால் அவருக்கே ஆட்டநாயகன் விருதினை வழங்கிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஒருபுறம் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை அடிக்காத வேளையில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட பவுலர்களுக்கு தான் ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் ஒரு போட்டியில் மூன்று விக்கெட்டை எடுத்த ஒரு வீரை விட்டுவிட்டு இரண்டு விக்கெட் எடுத்த வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது தவறு என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : IND vs WI : நான் இப்படி சூப்பரா பவுலிங் பண்ண இவங்க 2 பேர் தான் காரணம் – ஆட்டநாயகன் ஆவேஷ் கான்

டெத் ஓவர்களில் மிகப் பிரமாதமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதோடு ரன்களையும் சிக்கனமாக வழங்கி வரும் அர்ஷ்தீப் சிங் நிச்சயம் டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும் என்ற ஆதரவு குரலும் அவருக்காக ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement