சென்னை அணியின் பிரச்சனை தீரனும்னா தோனியை அந்த இடத்தில் களமிறக்குங்க – பார்திவ் படேல் யோசனை

Parthiv
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் பெயருக்கு ஏற்றார்போல் விளையாடாமல் படுமோசமாக செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் படு மோசமான தோல்விகளை பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தை பிடித்து அதலபாதாளத்தில் திண்டாடி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வருடத்தின் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்த அந்த அணி அதிலிருந்து எப்படி மீண்டு கோப்பையை தக்க வைக்கப் போகிறது என்ற மிகப்பெரிய கவலை அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Ruturaj

- Advertisement -

சாதிப்பாரா ஜடேஜா:
2008 முதல் கேப்டனாக செயல்பட்டு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சென்னையை உருமாற்றிய எம்எஸ் தோனியும் இந்த தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து விலகியது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜா இதற்கு முன் எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவர்.

அதன் காரணமாகவே இதுவரை சென்னை பங்கேற்ற 4 போட்டிகளிலும் எம்எஸ் தோனி அவருக்கு உறுதுணையாக உதவியாக இருந்த போதிலும் அவரால் வெற்றியை பதிவு செய்ய முடியவில்லை. எம்எஸ் தோனி கேப்டன்ஷிப் செய்த போது கூட சென்னை இதுபோல முதல் 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்ததே கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங்கை கடந்து இந்த வரலாற்று தோல்வியில் இருந்து சென்னையை மீட்டெடுத்து புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா வெற்றிப் பாதையில் நடக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Jadeja

தோனி ஓபனராக:
இந்த தோல்வியில் இருந்து சென்னை மீண்டு வர வேண்டுமெனில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் இன்னாள் கேப்டன் ஜடேஜா ஆகியோர் தங்களது பேட்டிங்கில் தீயாய் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது தடுமாறும் சென்னை அணியில் அதிரடியான மாற்றம் தேவைப்படுவதால் அதிரடிக்கு பெயர் போன எம்எஸ் தோனியை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னையை வெற்றிகரமான அணியாக மாற்றியவர்களில் அவரும் ஒருவர். தனது கேரியரை ஒரு தொடக்க வீரராக தொடங்கிய எம்எஸ் தோனி அதே கேரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் போது ஏன் ஓப்பனராக களமிறங்க கூடாது? தற்போது 7-வது இடத்தில் விளையாடும் அவருக்கு 10 – 15 பந்துகள் கூட சரியாக கிடைப்பதில்லை. எனவே 3-வது இடம் அல்லது 4-வது இடம் அல்லது ஓப்பனராக ஏன் தோனி விளையாடக்கூடாது. ஏனெனில் எம்எஸ் தோனி போன்ற ஒருவர் 14 – 15 ஓவர்கள் வரை நின்று விளையாடினால் முடிவு வேறு மாதிரி இருக்கும். நீங்கள் எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளனர்” என கூறினார்.

MS Dhoni 16

அவர் கூறுவது போல கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைக்கும்போது 3-வது இடம் போன்ற டாப் ஆர்டரில் விளையாடிய எம்எஸ் தோனி அதிரடியாக பேட்டிங் செய்து நிறைய ரன்களை குவித்தவர். அதிலும் 148, 183* போன்ற அவரின் முதல் 2 சதங்கள் 3-வது இடத்தில் விளையாடிய போது வந்ததாகும். ஆனால் காலப்போக்கில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்களின் வருகையால் தனது இடத்தை ஒரு கேப்டனாக இளம் வீரர்களுக்கு விட்டுக் கொடுத்த அவர் தனது வாழ்நாளின் பெரும்பாலான நாட்களில் இப்போதுவரை மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிலும் அற்புதமாக செயல்பட்டு பினிஷர் என்று பெயர் எடுத்துள்ளார்.

- Advertisement -

அப்படி ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக கேரியரை தொடங்கிய அவர் தற்போது தனது கேரியர் முடியும் தருணத்தில் இருக்கும் நிலையில் சமீப காலங்களாக மிடில் வரிசையில் களமிறங்கினாலும் முன்பு போல் அதிரடியாக செயல்பட்டு ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறுகிறார். அதிலும் கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வந்த அவர் இந்த வருடம் முதல் போட்டியிலேயே அதிரடியாக அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பினார். இருப்பினும் சென்னை அடுத்தடுத்த தோல்விகளில் தடுமாறும் நிலையில் அவர் டாப் ஆர்டரில் விளையாடினால் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

Dhoni

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “வேக பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் இந்தியா தடுமாறிய போது அவர் நிறைய ரன்களை அடித்துள்ளார். எடுத்துக்காட்டாக இலங்கைக்கு எதிராக 80 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் அடித்த சதம் போன்றவைகளைக் கூறலாம்.

இதையும் படிங்க : கேப்டன்ஷிப் அழுத்தம் சகஜம் தான். வெளிவர இதை செய்யுங்கள் போதும் – ஜடேஜாவுக்கு ஜாம்பவானின் ஆலோசனை

தற்போது மும்பையில் நிலவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் அவர் தடுமாறுவார் என அனைவரும் நினைக்கலாம். ஆனால் அதில் எப்படி விளையாட வேண்டும் என்று அவர் தனியாக ஒரு டெக்னிக் வைத்துள்ளார்” என கூறினார்.

Advertisement