சப்போர்ட் பண்ண எங்கள தலைகுனிய வைக்குறிங்களே, இதுக்கு மேல சான்ஸ் கிடைக்காது சாம்சன் – முன்னாள் வீரர் ஏமாற்ற பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா 2 – 0* என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்த தொடரில் விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாத நிலைமையில் விளையாடி வரும் இந்தியாவுக்கு முதல் போட்டியில் 150 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை பெற்றுக் கொடுத்த இளம் வீரர்கள் 2வது போட்டியில் வெறும் 152 ரன்கள் மட்டுமே எடுத்துது 2016க்குப்பின் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸிடம் அடுத்தடுத்த டி20 போட்டிகளில் அவமான தோல்வியை கொடுத்தது.

இத்தனைக்கும் இத்தொடரில் பந்து வீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தும் பேட்டிங்கில் அறிமுகமாக களமிறங்கிய திலக் வர்மாவை சூரியகுமார் உட்பட அனைவருமே சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக ஏற்கனவே வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வரும் சஞ்சு சாம்சன் 19, 7 என 2 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் ஏமாற்றத்தை கொடுத்தார். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் கடைசி நேரத்தில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த அவர் 2வது போட்டியில் ஆதரவு கொடுத்த ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தலைகுனியும் அளவுக்கு தரமான சுழலில் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

- Advertisement -

வாய்ப்பு கிடைக்காது:
கடந்த 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019இல் விளையாடிய கொடுமையை சந்தித்த அவர் 2021 வரை குப்பையை போல பயன்படுத்தப்பட்டு வந்தாலும் ஐபிஎல் தொடரில் கடினமாக போராடி கடந்த வருடத்திலிருந்து ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்று வருகிறார். அதில் கடந்த 2022 ஜூலையில் அயர்லாந்துக்கு எதிராக முதல் முறையாக அரை சதமடித்து 77 ரன்கள் குவித்த அவர் இதுவரை இந்தியாவுக்காக 18 டி20 இன்னிங்ஸில் 320 ரன்களை 18.82 என்ற மோசமான சராசரியிலேயே எடுத்துள்ளார்.

சொல்லப்போனால் கத்துக்குட்டியான அயர்லாந்துக்கு எதிராக அடித்த அந்த 77 ரன்கள் இன்னிங்ஸ் தவிர்த்து 12 என்பதே அவருடைய படுமோசமான டி20 பேட்டிங் சராசரியாக இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறது. மேலும் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இதுவரை மொத்தமாக பெற்ற 4 போட்டிகளில் 1 அரை சதம் மட்டுமே அடித்துள்ள அவர் பெரும்பாலான போட்டிகளில் சுமாராக செயல்பட்டு வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் ஏற்கனவே போட்டி மிகுந்த இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தாத அவருக்கு இனியும் ஆதரவு கொடுக்கப் போவதில்லை என்று சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசத் துவங்கியுள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் கிடைக்கும் வாய்ப்புகளையும் சஞ்சு சாம்சன் பயன்படுத்தாமல் ஆதரவு கொடுப்பவர்கள் ஏமாற்றமடையும் அளவுக்கு செயல்படுவதாக முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒவ்வொரு முறையும் இந்தியா தோல்வியை சந்திக்கும் போது அதில் சில எதிர்மறையான முடிவுகளும் கிடைக்கும். இந்த சுற்றுப்பயணத்தில் வெள்ளைப் பந்து தொடர்களில் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்யாததே பிரச்சனையாக இருந்து வருகிறது”

“அதை இதுவரை இந்த தொடரில் நம்மால் பார்க்க முடியவில்லை. மேலும் ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சன் அணியில் வாய்ப்பு பெறாத போது நாம் அவரைப் பற்றி பேசுகிறோம். ஆனால் முதலில் அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து அசத்துவதில்லை. எனவே ஆம் அல்லது இல்லை என்று சொன்னாலும் அவருக்கான நேரமும் வாய்ப்பும் ஓடிக் கொண்டிருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் சாம்சன் நிறைய வாய்ப்புகளை பெறுகிறார். இருப்பினும் அந்த பெரும்பாலான வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொள்வதில்லை”

இதையும் படிங்க:ஐபிஎல் அப்றம் நாடு தான் முக்கியம், தனது கேரியரின் டாப் 5 மறக்க முடியாத தருணங்களை வெளியிட்ட ஹிட்மேன் ரோஹித் சர்மா

“மொத்தத்தில் இந்த தொடரில் திலக் வர்மா மட்டுமே மிகவும் கச்சிதமாக விளையாடிய பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். இதை தொடர்ந்து இத்தொடரை வென்று தங்களை தரவரிசையில் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க கடைசி 3 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement