இதெல்லாம் நல்லதாவே எனக்கு தோனல.. இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறை – சுட்டிக்காட்டிய பார்த்திவ் படேல்

Parthiv-Patel
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது முதலில் அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அதனை தொடர்ந்து இரண்டாவதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியன் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்கி விளையாட இருக்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றவில்லை என்பதனால் இம்முறை இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க காத்திருக்கிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல் ராகுல் செயல்படுவார் என இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அறிவித்திருந்தார். இதன் காரணமாக நாளைய போட்டியில் கே.எஸ் பரத்திற்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் கே.எல் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி டெஸ்ட் போட்டிகளில் கே.எல் ராகுல் கீப்பராக செயல்படுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல் தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் பகிர்ந்த தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை விக்கெட் கீப்பர் என்பவர் ஒரு முக்கியமான அங்கம் வகிப்பவர்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டன் யார் தெரியுமா? – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்

என்னை பொருத்தவரை டெஸ்ட் போட்டிகளில் ரஞ்சிக்கோப்பை அல்லது முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்யும் ஒரு வீரர் தான் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராகவும் இருக்க வேண்டும். இப்படி பகுதி நேரமாக விக்கெட் கீப்பிங் செய்யும் ஒருவரை அந்த இடத்தில் தேர்வு செய்த தவறு என்பது போல பார்த்திவ் படேல் தனது கருத்தினை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement