தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டன் யார் தெரியுமா? – பி.சி.சி.ஐ கொடுத்த விளக்கம்

Bumrah
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட தயாராக காத்திருக்கின்றனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பி இந்த டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதனால் இந்த டெஸ்ட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்க இருக்கிறது. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்பதனால் இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த மோசமான சாதனையை தகர்த்து வரலாறு படைக்கும் என்று ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செய்லபடவுள்ள வேளையில், இந்த தொடருக்கான துணைக்கேப்டனாக பும்ரா செயல்பட இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யை தெளிவான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வந்த ரஹானே மற்றும் கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் அவ்வப்போது துணைக்கேப்டனாக இருந்தாலும் ஒவ்வொரு தொடருக்கும் வீரர்களுக்கு இடையே கேப்டன்சி மாற்றம் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக அணிக்கு திரும்பியுள்ளதால் யார் துணை கேப்டன்? என்ற குழப்பம் அனைவரது மத்தியிலும் இருந்த வருகிறது.

இதையும் படிங்க : தெ. ஆ தொடரை இந்தியா வெல்ல ரோஹித் சர்மா அதை மாத்தியே ஆகணும்.. கவாஸ்கர் கொடுத்த முக்கிய எச்சரிக்கை

இந்நிலையில் கே.எல் ராகுல் அணியில் இருக்கும் போதும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து நிச்சயம் பும்ரா தான் முதன்மை டெஸ்ட் கேப்டனாக செயல்படுவார் என்பதனாலே அவருக்கு இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement