தெ. ஆ தொடரை இந்தியா வெல்ல ரோஹித் சர்மா அதை மாத்தியே ஆகணும்.. கவாஸ்கர் கொடுத்த முக்கிய எச்சரிக்கை

Sunil Gavaskar 7
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே நாளில் துவங்குகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக வென்று புதிய சரித்திரம் படைக்குமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த தொடரில் வேகத்துக்கு சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா வெற்றி பெறுவதற்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிப்பது முக்கியமாகிறது. சொல்லப்போனால் அந்த 2 பேட்ஸ்மேன்களுமே 2023 உலகக் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருப்பதால் இத்தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:
இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அதே போல செயல்படாமல் இத்தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் விளையாடுவதற்கு தன்னுடைய அணுகுமுறையை மாற்ற வேண்டும் என சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“முதலில் உங்களுடைய மன நிலைமையை டெஸ்ட் போட்டிக்குள் கொண்டு வருவதே முதல் சவாலாக இருக்கும். இதுவரை விளையாடிய ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 10 ஓவர்களில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அணிக்காக எந்தளவுக்கு ரன்கள் குவிக்க முடியுமோ அந்தளவுக்கு எடுக்க வேண்டும் என முடிவெடுத்து அட்டாக் செய்து அதிரடியாக விளையாடினார். இருப்பினும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தகுந்தார் போல் அவர் தம்முடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

“குறிப்பாக இத்தொடரில் நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்பட வேண்டும். ஒருவேளை நாள் முழுவதும் விளையாடினால் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் எளிதாக அடித்து 180 அல்லது 190 ரன்களை விளாசி அவுட்டாகாமல் வெளியே வர முடியும். அந்த வகையில் அவர் விளையாடினால் இந்தியா எளிதாக ஒரு நாளில் 300 ரன்கள் அடித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: என்னோட கருத்தை நீங்க பொய்யாக்குனா சந்தோசம்.. ஆனா அவர் தான் சரியான 3வது ஃபாஸ்ட் பவுலர்.. கவாஸ்கர் கருத்து

அவர் கூறுவது போல ரோகித் சர்மா மட்டும் சற்று நிதானமாக விளையாடினால் பின்னர் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை திறமையை கொண்டவர் என்பதை அனைவரும் அறிவோம். எனவே தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக சாதனை படைப்பதற்கு அவர் பேட்டிங்கில் சற்று அணுகுமுறையை மாற்றி விளையாடுவது அவசியமாவது குறிப்பிடத்தக்கது.

Advertisement