இந்திய அணியில் இனிமேல் இவர் விளையாட வாய்ப்பில்லை – பார்த்திவ் படேல் ஓபன்டாக்

Parthiv
- Advertisement -

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகள் மட்டுமே சிறப்பாக நடைபெற்ற வேளையில் 5வது போட்டி கொரோனா அச்சம் காரணமாக நடைபெறாமல் போனது. இந்த தொடரில் இந்திய அணியானது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலோனோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சில விமர்சனங்களும் எழுந்தன.

Root

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துணை கேப்டனாக ரஹானே இந்த தொடரில் 4 போட்டிகளில் மொத்தம் ஏழு இன்னிங்ஸ்களில் விளையாடி 109 ரன்களை மட்டுமே குவித்தார். இதனால் இனிமேல் அவர் அணிக்கு தேவையா ? இனியும் இவர் அணியில் நீடிக்க வேண்டுமா ? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி இந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் பலர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் அவர்களை பயன்படுத்தலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரஹானேவின் இடம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் கூறுகையில் : ரஹானேவின் இறுதி ஆட்டம் இதுதான் என்று தோன்றுகிறது.

Rahane-1

இந்த இங்கிலாந்து தொடருக்கு பின்னர் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ஏனெனில் 2016 ஆம் ஆண்டு அவரது பேட்டிங் வேறு லெவலில் இருந்தது. அதன் பிறகு தற்போது மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன், ரன் குவிக்கவும் தடுமாறி வருவதால் இனியும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது சந்தேகம் என்று தோன்றுகிறது.

மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து அந்த இடத்தை பலப்படுத்துவதற்கான வேலையை இந்திய அணி செய்யும் என்றும் நான் நம்புகிறேன். இதன் காரணமாகவே ரஹானே இனி இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இல்லை என பார்த்திவ் படேல் வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement