சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஆனாலும் அவருக்கு பெரியளவில் அந்த அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கூட ஒரு சில வாய்ப்புகளை மட்டுமே பெற்ற அவர் பந்துவீச்சில் பெரியளவில் பயன்படுத்தப்படாத வேளையில் டாப் ஆர்டரில் பேட்ஸ்மேனாக ஒரு சில போட்டிகளில் பங்கேற்று விளையாடியிருந்தார். அதேபோன்று சில ஆட்டங்களில் இம்பேக்ட் வீரராகவும் அவர் பயன்படுத்தப்பட்டிருந்தார்.
வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் செய்ய நினைக்கவில்லை : பார்த்திவ் பட்டேல்
இந்நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்ய இருந்ததாகவும் பல்வேறு செய்திகள் அப்போது வெளியாகி இருந்தன. ஏனெனில் சென்னை அணியில் விளையாடிய தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். அதனால் அவருக்கு சரியான மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தர் இருப்பார் என்பதனாலே இந்த பரிமாற்றம் நடைபெற இருப்பதாகவும் பேசப்பட்டது.
ஆனால் வாஷிங்டன் சுந்தரை விட்டுக் கொடுக்காத குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிர்வாகம் அவரை தொடர்ந்து தங்களது அணியில் தக்க வைத்துக் கொண்டதாக அறிவித்தது. அதன் பின்னர் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் பங்கேற்ற அந்த அணி தங்களது அணியை பலப்படுத்தும் வகையில் மேலும் சில வீரர்களை வாங்கியிருந்தது.
இந்நிலையில் வாஷிங்டன் சுந்தரை ஒருபோதும் டிரேடிங் செய்ய நாங்கள் நினைத்ததில்லை என குஜராத் அணியின் துணை பயிற்சியாளரான பார்த்திவ் பட்டேல் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : வாஷிங்டன் சுந்தரை டிரேடிங் செய்யும் முடிவை நாங்கள் ஒருபோதும் நினைத்தது கிடையாது. ஏனெனில் அவரின் திறமை மீது எங்களுக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது.
கடந்த ஓராண்டாகவே மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் அற்புதமான வீரராக தற்போது பரிமாணம் அடைந்துள்ளார். அவரால் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய முடிகிறது. அதேபோன்று பின் வரிசையிலும் பேட்டிங் செய்ய முடிகிறது. பந்துவீச்சை பொறுத்த வரை பவர்பிளேவிலும் வீசுகிறார். கடினமான வேலைகளிலும் போட்டியின் பிற்பகுதியிலும் பந்து வீசுகிறார்.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவின் வருகையால் மீண்டும் வாய்ப்பை இழக்கும் கம்பீரின் செல்லப்பிள்ளை – விவரம் இதோ
எனவே அவரை ஒரு முழு திறனுடைய ஆல்ரவுண்டராகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே அவரை எந்த நேரத்திலும் நாங்கள் டிரேடிங் செய்ய யோசித்ததே கிடையாது என பார்த்திவ் பட்டேல் கூறியிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது வாஷிங்டன் சுந்தரை 3 கோடியே 20 லட்சம் ரூபாய் என்கிற தொகைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



