சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது லக்னா நகரில் நேற்று நடைபெறயிருந்த வேளையில் அதிக பனிப்பொழிவு காரணமாக போட்டி ரத்தானது.
ஜஸ்ப்ரீத் பும்ராவின் வருகையால் வாய்ப்பை இழக்கப்போகும் இளம்வீரர் :
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது டிசம்பர் 19-ஆம் தேதி நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கடைசி டி20 போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றும் முனைப்போடு இந்திய அணியும், அதேவேளையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்போடு தென்னாப்பிரிக்க அணியும் தயாராகி வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதி போட்டியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஐந்தாவது போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால் ஹர்ஷித் ராணா அவரது இடத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.
ஏனெனில் மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் மோசமான உடல்நிலை காரணமாக வீட்டிற்கு திரும்பியிருந்த பும்ரா தற்போது அவரது குடும்ப உறுப்பினரின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து மீண்டும் கடைசி போட்டிக்கு முன்னதாக இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவின் இந்த விடயத்தில் நிர்வாகம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் – ராபின் உத்தப்பா கருத்து
இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் பும்ராவிற்கு பதிலாக விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா கடைசி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக பும்ரா விளையாடுவார் என்று தெரிகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது போட்டியில் பும்ராவுக்கு பதிலாக விளையாடியிருந்த ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



