ஜஸ்ப்ரீத் பும்ராவின் இந்த விடயத்தில் நிர்வாகம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் – ராபின் உத்தப்பா கருத்து

Uthappa and Bumrah
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது காயத்தை சந்தித்து வருவதால் முக்கியமான தொடர்களில் மட்டுமே அவரை நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. ஏனெனில் அளவுக்கு அதிகமாக அவரை பயன்படுத்தி மேலும் காயம் ஏற்பட்டால் அவரது கரியரே முடிவுக்கு வரலாம் என்கிற பயம் இருக்கிறது. உலகக்கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக பும்ராவே இருந்து வருகிறார்.

ஜஸ்ப்ரீத் பும்ராவை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் : ராபின் உத்தப்பா

இதன் காரணமாக பெரிய அணிகளுக்கு இடையேயான முக்கியமான தொடர்களில் மட்டுமே ஜஸ்ப்ரீத் பும்ரா சுழற்சி முறையில் விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடி வருகிறார்.

- Advertisement -

முன்னதாக டெஸ்ட் தொடரின் இரண்டு ஆட்டங்களிலும் விளையாடிய அவர் ஒருநாள் தொடரின் போது ஓய்வெடுத்துக் கொண்டார். பின்னர் தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடியிருந்த அவர் மூன்றாவது ஆட்டத்துக்கு முன்னதாக வீடு திரும்பியிருந்தார். இவ்வேளையில் எஞ்சியுள்ள கடைசி போட்டியில் விளையாடுவதற்காக அவர் இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.

எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரின் முதன்மை வீரராகவும் அவரே பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவரை பாதுகாப்பாக விளையாட வைக்க வேண்டும் என ராபின் உத்தப்பா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜஸ்ப்ரீத் பும்ரா நமது அணியில் இருக்கும் ஒரு மேட்ச் வின்னர் வீரர்.

- Advertisement -

அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் 32 வயதாகும் அவர் வேகப்பந்து வீச்சாளராக அதிக போட்டிகளில் விளையாடினால் காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோன்று அவருடைய பௌலிங் ஆக்சன் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாக உள்ளதால் எளிதில் காயம் ஏற்படுதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு மட்டுமல்ல இனி வரப்போகும் பல ஆண்டுகள் இவர்தான் கேப்டன் – குஜராத் டைரக்டர் அளித்த பேட்டி

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே இடைவெளி உள்ளது. அதனால் அவரை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே டி20 உலக கோப்பை தொடரின் போது அவரை முழு வீச்சில் நம்மால் விளையாட வைக்க முடியும். அதன் காரணமாக நிர்வாகம் அவரது பணிச்சுமையில் கவனமாக இருக்க வேண்டும் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement