- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முகமது சிராஜை விட ஹர்ஷித் ராணா இந்த விடயத்தில் பெஸ்ட்.. அவரை யூஸ் பண்ணுங்க – பார்த்திவ் படேல் கருத்து

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணாவிற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிடைத்த அறிமுக வாய்ப்பே வரலாற்று சாதனையாக மாறியுள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் விரைவில் இடம் கிடைக்க வேண்டும் என்று பலரும் பேசி வந்த வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

முகமது சிராஜை விட ஹர்ஷித் ராணா தான் பெஸ்ட் :

அந்த முதல் போட்டியிலேயே அவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தான் விளையாடிய முதல் டி20 போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகமான அவர் அதேபோன்று மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான வடிவங்களிலும் அறிமுகமான போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனை நிகழ்த்தி இருந்தார்.

என்னதான் ரன்களை சற்று கூடுதலாக வழங்கினாலும் விக்கெட் டேக்கிங் பவுலராக இருக்கும் இவர் தொடர்ந்து இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றும் முகமது சிராஜை விட ஹர்ஷித் ராணா மீது இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஹர்ஷித் ராணா முகமது சிராஜ்ஜை விட சிறந்த பந்துவீச்சாளர். ஏனெனில் முகமது சிராஜால் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீச முடியும். ஆனால் பழைய பந்தில் நன்றாக வீச முடியாது. அதேவேளையில் ஹர்ஷித் ராணவோ பழைய பந்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். அதனை நாம் பார்த்தும் வருகிறோம்.

இதையும் படிங்க : 2024 டி20 உலக சாம்பியன் இந்திய அணிக்கு வைர தங்க மோதிரம் பரிசளித்த பிசிசிஐ.. அதன் சிறப்புகள் இதோ

பழைய பந்தினை பயன்படுத்தும் போது சிராஜின் தாக்கம் குறைகிறது. ஆனால் அதேவேளையில் மிடில் ஓவர்கள் மற்றும் கடைசி ஓவர்களிலும் ஹர்ஷித் ராணா மிகச் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றும் எனவே சிராஜை விட ஹர்ஷித் ராணாவுக்கு இனி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -