இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சத்தீஸ்வர் புஜாரா மூன்றாம் இடத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்ட வேளையில் அவருக்கு அடுத்ததாக தமிழக வீரரான சாய் சுதர்சனுக்கு மூன்றாம் இடத்தில் களமிறங்குவதற்கான வாய்ப்பு இந்திய அணியில் வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு கிடைத்த இடத்தை வாய்ப்பை சுமாராக பயன்படுத்திய சாய் சுதர்சன் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 273 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்துள்ளார். அதன் காரணமாக நிர்வாகம் அவர்மீது சற்று அதிருப்தி அடைந்துள்ளது.
ஷெர்பேன் ரூதர்போர்டை நீக்க வாஷிங்டன் சுந்தரின் வளர்ச்சி தான் காரணம் : பார்த்திவ் படேல்
அதேவேளையில் மற்றொரு அனுபவ வீரரான கருண் நாயரும் உள்ளூர் போட்டிகளில் நிறைய ரன்களை குவித்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து இங்கிலாந்து தொடரின் போது நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி 111 ரன்களை மட்டுமே குவித்தார். இப்படி இளம் வீரரான சாய் சுதர்சனும் சரி, அனுபவ வீரரான கருண் நாயரும் சரி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி வந்த சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மூன்றாம் இடத்தில் விளையாடி வருகிறார். நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 82 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் குவித்த வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது இன்னிங்சில் 92 பந்துகளுக்கு சந்தித்து 31 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதன்மூலம் பேட்டிங்கிலும் அவருக்கு திறன் இருப்பதை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் அவரது பேட்டிங் வளர்ச்சி காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் தொடரில் வாஷிங்டன் சுந்தரை டாப் ஆர்டரில் பயன்படுத்த குஜராத் அணி திட்டம் தீட்டி வருவதாக தெரிகிறது. அதன் காரணமாகவே அவர்கள் சிஎஸ்கே அணிக்கு வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்ய முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு வாஷிங்டன் சுந்தர் காண்பித்த வளர்ச்சி தங்களை புதிய திட்டத்திற்கு அழைத்து வந்துள்ளதாக குஜராத் அணியின் துணை பயிற்சியாளரான பார்த்திவ் பட்டேல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : வாஷிங்டன் சுந்தர் கடைசி சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் நல்ல முதிர்ச்சி கண்டுள்ளார்.
இதையும் படிங்க : முதல் டெஸ்டில் சொதப்பி இருந்தாலும் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ
அவருடைய அற்புதமான பேட்டிங் காரணமாக எங்களது அணியில் அடுத்த ஆண்டு அவரை பயன்படுத்துவதில் ஏகப்பட்ட திட்டங்களை வைத்துள்ளோம். அதன் காரணமாகவே ஷெர்பேன் ரூதர்போர்டை எங்களது அணியில் இருந்து வெளியேற்றினோம். அவரது இடத்தை வாஷிங்டன் சுந்தரை வைத்து எங்களால் நிரப்ப முடியும். வாஷிங்டன் சுந்தரிடம் நிறைய திறன் இருக்கிறது என்றும் பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



