முதல் டெஸ்டில் சொதப்பி இருந்தாலும் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு – விவரம் இதோ

Jaiswal
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை தனது கரியரின் ஆரம்பத்திலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால் இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ஜெய்ஸ்வால் :

ஆனால் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஏமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார். ஏனெனில் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 27 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரியுடன் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதேபோன்று 123 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடுகையிலும் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து டக் அவுட்டாகி வெளியேறிந்தார். இப்படி அவர் விளையாட மோசமான ஆட்டம் அவருக்கு சில மோசமான சாதனைகளையும் பெற்று தந்தது.

இப்படி முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சொதப்புலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கௌஹாத்தி மைதானத்தில் நவம்பர் 22-ஆம் தேதி துவங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒரு அசத்தலான சாதனையை நிகழ்த்தவும் தற்போது அவருக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : கடந்த 2023-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 51 இன்னிங்ஸ்களில் விளையாடி 7 சதம் மற்றும் 12 அரைசதம் என 2440 ரன்கள் குவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் மேலும் 60 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2500 ரன்களை பூர்த்தி செய்வார்.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா டெஸ்ட்டில் நல்லா ஆடியிருந்தாலும்.. அவருக்கு ஒரு ஆபத்து இருக்கு – தினேஷ் கார்த்திக் கருத்து

தற்போது 23 வயதே ஆன ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர துவக்கிரவராக விளையாடி வரும் வேளையில் தற்போதே 2500 ரன்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவர் 1000 ரன்களை அடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement