வாஷிங்டன் சுந்தர் கொல்கத்தா டெஸ்ட்டில் நல்லா ஆடியிருந்தாலும்.. அவருக்கு ஒரு ஆபத்து இருக்கு – தினேஷ் கார்த்திக் கருத்து

DK and Washington
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது மூன்றாவது வீரராக களமிறங்க தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஒரு அரைசதம் மட்டுமே அடித்து ஏமாற்றத்தை அளித்திருந்தார். பின்னர் தற்போது வரை 9 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 30 ரன்கள் சராசரியுடன் 273 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

3-ஆம் இடத்தில் களமிறங்குவது வாஷிங்டன் சுந்தருக்கு ஆபத்து : தினேஷ் கார்த்திக்

அதேபோன்று மற்றொரு வீரரான கருண் நாயரும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக 4 இன்னிங்ஸ்களில் விளையாடியிருந்த அவர் 111 ரன்களை மட்டுமே எடுத்து சொதப்பியிருந்தார். இதனால் அவருக்கு சொந்த மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

- Advertisement -

இப்படி இரண்டு வீரர்களும் மூன்றாவது இடத்தில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நிர்வாகத்தின் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது இடத்தில் களமிறங்க சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட வாஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் 82 பந்துகளை சந்தித்து 29 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக 92 பந்துகளை சந்தித்து 31 ரன்களையும் குவித்து தனது பேட்டிங் பொட்டன்ஷியல் என்ன என்பதனை இந்த போட்டியின் மூலம் நிரூபித்துள்ளார்.

- Advertisement -

ஆனாலும் இப்படி வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக மூன்றாம் இடத்தில் களமிறங்குவது அவரது பந்துவீச்சு திறனை பாதிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் அவரை எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்.

எனவே அவர் பந்துவீச்சிக்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேபோன்று பின்வரிசையில் அவரால் பேட்டிங்கில் பெரியளவில் கை கொடுக்க முடியும். ஆனால் அவரை மூன்றாவது வீரராக களமிறக்கி விட்டால் அவரிடம் இருந்து நிர்வாகம் ஒவ்வொரு போட்டியிலுமே அதிக ரன்களை எதிர்பார்க்கும். எனவே அவர் பேட்டிங் பயிற்சியிலேயே அதிக கவனம் செலுத்த நேரிடும்.

இதையும் படிங்க : நெட் பிராக்டீஸ் என்றால் கூட நான் பும்ராவை பாத்து பயப்படுவேன்.. அதுக்கு காரணம் இதுதான் – கே.எல் ராகுல் வெளிப்படை

இதன் காரணமாக அவரது பந்துவீச்சு திறன் பாதிப்படையலாம். எனவே என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் அவர் பந்துவீச்சில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவைப்படும்போது பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். அதுதான் ஒரு ஆல் ரவுண்டராக அவருக்கும் நல்லது என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement