அணியில் இடம் கிடைத்தும் தோனியால் வீணாப்போனது..! இந்திய வீரர் புலம்பல் – யார் தெரியுமா..?

parthi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு முன்னர் விக்கெட் கீப்பராக செயலாற்றி வந்தவர் பார்த்தீவ் படேல். விக்கெட் கீப்பராக இருந்த இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வந்தார். சமீபத்தில் சில காலமாக தனக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போன காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் பார்த்தீவ் படேல்.
patel

இந்திய அணியில் முன்னாள் கீப்பராக இருந்த நயன் மோங்கியாவின் ஓய்விற்கு பிறகு, 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பார்தீவ் பட்டேல் இந்திய அணியில் சேர்க்கப்படார். தனது 17 வயதில் இந்திய அணியில் சேர்க்கப்பட்ட இவர் 25 டெஸ்ட் மற்றும் 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்று இரு திறமைகளை கொண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்ட இவர், சரியாக செயல்படாததால் இந்திய அணியில் நீடிக்க முடியவில்லை. பின்னர் இவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இவருக்கு பதிலாக 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படார்.
patel

தினேஷ் கார்த்திக்கும் அணியில் சிறப்பாக செயல்படாததால் அவருக்கு பின் தோனி அந்த இடத்தை பிடித்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடம் பெறாமல் போனதற்கு தோனி காரணமில்லை என்று தனது தவறுகளே காரணம் என்றும் பார்த்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் தெரிவிக்கையில்”ஒரு கீப்பராக நான் என்னுடைய பணியை சிறப்பாக செய்யவில்லை, அது என்னுடைய தவறு தான். அதனால் தான் இந்திய அணியில் நிரந்தர இடம் என்பது எனக்கு ஒரு சாத்தியமில்லா ஒரு விடயமாக ஆகி விட்டது.

நான் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு தோனி காரணம் இல்லை. தோனி ஒரு தலைசிறந்த வீரர், அவரை போன்ற லெஜண்ட் இருக்கும் தலைமுறையில் நான் பிறந்திருக்க கூடாது என்று என்னிடம் பல பேர் கூறியுள்ளனர். நான் சரியாக விளையாடாததால்தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். இது அனைவருக்கும் நடக்கும் ஒரு இயல்பான விடயம் தான். ” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisement