பெங்களூரு அணி இவரை சரியாக பயன்படுத்தி இருக்காங்க. இந்த ஐ.பி.எல் தொடரோட ஹீரோ இவர்தான் – பார்த்திவ் படேல் கணிப்பு

Parthiv
- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது, 29 போட்டிகள் மட்டுமே முடிவடைந்திருந்த நிலையில், தொடரில் பங்கேற்றிருந்த பல்வேறு வீரர்களுக்கும், அணி நிர்வாக ஊழியர்களுக்கும் கொரனா தோற்று உறுதியானதை அடுத்து, நடப்பு ஐபிஎல் தொடரானது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் 31 போட்டிகளை எங்கே எந்த நேரத்தில் நடத்துவது என்று பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. இதற்கிடையில் ஸ்டார் போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்துள்ள இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பார்திவ் பட்டேல், நடைபெற்று முடிந்துள்ள 29 போட்டிகளில் இருந்து இந்த தொடரின் சிறந்த வீரர் யார் என்று கூறியிருக்கிறார். அப்பேட்டியில் அவர் கூறும்போது,

- Advertisement -

பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஹம்மது சிராஜ், இந்த தொடரில் அவர் வீசிய யார்க்கர் பந்துகளால் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தயிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல்லில் அவர்தான் சிறந்த வீரர். கடந்த ஐபிஎல் மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பந்து வீச்சு அட்டகாசமாக இருந்திருக்கிறது. முஹம்மது சிராஜ் புது பந்துகளில் ஆரம்ப ஒவர்களை மட்டுமே நன்றாக வீசுவார் என்ற விமர்ச்சனம் அவர்மேல் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த ஐபிஎல்லில் டெத் ஓவர்களில் யார்க்கர் பந்துகளை அற்புதமாக வீசி, அந்த விமர்ச்சனத்திற்கு எல்லாம் முஜம்மது சிராஜ் பதில் அளித்துள்ளார் என்று கூறினார். மேலும் பேசிய பார்த்திவ் பட்டேல், பெங்களூர் ராயல்சேலஞ்சர்ஸ் அணி இந்த ஐபிஎல்லில் முஹம்மது சிராஜை அற்புதமாக பயன்படுத்தி, பல தொடர்களாக அந்த அணிக்கு இருந்த டெத் ஓவர் பிரச்சனையை சரி செய்திருக்கிறது.

மேலும் ஹர்ஷல் பட்டேலை டெல்லி அணியிலிருந்து வாங்கியதும் அந்த அணிக்கு பெரும் அதிர்ஷ்டமாக அமைந்திருக்கிறது. ஏனெனில் இந்த இருவரும் அந்த அணியின் டெத் ஓவர் பிரச்சனைகளை சரி செய்து விட்டனர் என்று அந்த பேட்டியல் கூறியிருக்கிறார். பார்திவ் பட்டேல் கூறியிருப்பதை போலவே முஹம்மது சிராஜ் இந்த ஐபிஎல் தொடரில் டெத் ஒவரில் மிகச் சிறப்பாகவே பந்துவீசி உள்ளார். இத்தொடரின் பத்தாவது போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொண்டது கொல்கத்தா அணி.

siraj

அந்த போட்டியில் கொல்கத்தாஅணி சேஸிங் செய்தபோது அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரு ரஸலுக்கு 19 வது ஓவரை வீசிய சிராஜ், அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் டெல்லி அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 14 ரன்களை டிஃபென்ட் செய்து, அந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வெற்றிபெறச் செய்திருக்கிறார் முஹம்மது சிராஜ்.

Advertisement