9 விரல்களுடன் 18 ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடிவரும் வீரர் பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

Glove
- Advertisement -

2002 ஆம் ஆண்டு தனது 17 வயதில் இந்திய தேசிய அணிக்காக அறிமுகமானவர் பார்திவ் பட்டேல் சச்சினுக்கு அடுத்து மிக இளம் வயதில் இந்திய அணிக்காக ஆடியவர் அவர். மேலும் இங்கிலாந்து மண்ணில் அதன் சொந்த அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரிலும் இடம் பிடித்தார் .ஆனால், அவர் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை.

Parthiv 2

- Advertisement -

அதற்குப் பிறகு தோனியின் வருகையால் ஒரு விக்கெட் கீப்பராக இருந்த பர்த்திவால் இடத்தை முற்றிலுமாக இழந்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியில் கடந்த பல வருடங்களாக அவரால் இடம்பிடிக்க முடியவில்லை. இருந்தாலும் உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ஆடி கடந்த 2018 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்று வீரராக களமிறங்கினார்.

தற்போது 35 வயதான அவர், தனது குஜராத் அணியின் கேப்டனாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் யாருக்கும் தெரியாத ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எனக்கு ஆறு வயதாக இருந்தபோது எனது விரல் கதவு இடுக்கில் சிக்கி துண்டாகி விட்டது.

parthiv 1

எனது சுண்டு விரல் துண்டாகி போனதால் என்னால் சரியாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது எனது கைகளில் விக்கெட் கீப்பிங் கிளவுஸ் சரியாக நிற்காது. அதனால் அதனை டேப் போட்டு ஒட்டி ஆடுவேன்.தற்போது திரும்பிப் பார்க்கையில் 9 விரல்களுடன் இந்திய அணிக்காக ஆடியது பெருமையாக இருக்கிறது.

- Advertisement -

அனைத்து விரல்களும் இருந்திருந்தால், எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் இந்த நிலையில் இந்திய அணிக்காக ஆடியது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் பார்த்திவ் படேல்.

Parthiv

பார்திவ் படேலுக்கு இப்படி ஒரு குறை இருப்பதை இத்தனை நாட்களில் நம்மில் பலரும் கவனிக்க தவறி இருப்போம்.அதனை தற்போது அவரே கூறியுள்ளது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement