கண்ணை மூடிட்டு சொல்லலாம் இவரே இந்திய அணியின் பெஸ்ட் கேப்டன் – பார்த்திவ் பட்டேல் ஓபன் டாக்

parthiv
- Advertisement -

சௌரவ் கங்குலி மற்றும் மகேந்திர சிங் தோனி என இருவருமே இந்திய கிரிக்கெட்டிற்கு மிகப்பெரும் பங்களித்தவர்கள். இருவருமே கேப்டனாக பல சாதனைகள் புரிந்தவர்கள். கங்குலி கேப்டனாக இருக்கும் போது இந்தியா இளம் அணியாக இருந்தது. ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தேவைப்பட்டது. சர்ச்சைக்குள்ளான இந்திய அணியை ஆக்ரோஷமாக வழிநடத்தி தூக்கியது சௌரவ் கங்குலி தான்.

Ganguly-dhoni

- Advertisement -

கங்குலி உருவாக்கிய இந்த புதிய அணியில் பல இளம்வீரர்கள் இந்திய அணியில் ஜொலித்தார்கள். பின்னர் அப்படி கங்குலியின் தலைமையில் உருவான அந்த அணியை வைத்து இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் தோனி. 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக இளம் அணியை கொண்டு உலகக்கோப்பையை கைப்பற்றினார்.

கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச ஐசிசி கோப்பைகளையும் இவர்தான் வென்றார். இருவருக்குமிடையேயான ஒப்பீடு காலம் காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவர்களின் தலைமையில் அறிமுகமாகி மகேந்திர சிங் தோனி இடம் தனது இடத்தை இழந்த பார்த்திவ் படேல் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில்…

Parthiv

இருவருமே நல்ல கேப்டன்கள் தான். 2003 ஆம் ஆண்டு தோல்வியில் சென்ற அணியை மீட்டவர் சௌரவ் கங்குலி. அதேபோல் 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தோற்றபோது அணியை மீட்டார் தோனி. தோனி பல கோப்பைகளை வென்று இருக்கிறார் .ஆனால் இருவருக்கும் இடையே யார் சிறந்த கேப்டன் என்று கேட்டால் அது சவுரவ் கங்குலி தான் என்று கூறியுள்ளார் பார்த்திவ் படேல்..

Ganguly 2

இந்திய அணியில் தோனிக்கு முன்னர் இடம்பிடித்த பார்த்திவ் பட்டேல் தோனியின் வருகையால் அணியில் இடத்தை இழந்தவர். மேலும் அவ்வப்போது இந்திய அணியில் விளையாடியும் உள்ளார். அதைவிட தற்போது குறிப்பிடப்பவேண்டிய விடயம் யாதெனில் இதுவரை அவர் ஓய்வு முடிவினை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement