- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாவம்ங்க சுப்மன் கில்.. இதனால தான் அவுட்டானாரு.. ஒன்னும் சொல்லாதீங்க.. பார்திவ் படேல் பேட்டி

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 6, சுப்மன் கில் 0, விராட் கோலி 6 ரன்களில் ஹசன் மஹ்முத் வேகத்தில் அவுட்டானார்கள்.

குறிப்பாக துணைக் கேப்டன் சுப்மன் கில் லெக் சைட் வந்த பந்தை தேவையின்றி கீப்பர் பக்கம் பவுண்டரி அடிக்க முயற்சித்து டக் அவுட்டானார். கடந்த இலங்கை ஒருநாள் தொடரில் இதே போல சுமாராக பேட்டிங் செய்த அவர் இந்தியா 27 வருடங்கள் கழித்து தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானார். அதே போல இப்போட்டியிலும் அவுட்டானதால் இவர் இன்னும் முன்னேறவில்லை என இந்திய ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

துரதிஷ்டவசமான அவுட்:

இந்நிலையில் இப்போட்டியில் சுப்மன் கில் துரதிஷ்டவசமாக அவுட்டானதால் அவரை யாரும் விமர்சிக்க வேண்டியதில்லை என முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் துரதிஷ்டவசமாக அவுட்டானார் என்று நினைக்கிறேன். ஏனெனில் லெக் சைடுக்கு கீழே நீங்கள் இறங்கும் போது அது ஒரு உள்ளுணர்வு ஷாட்”

“வெள்ளைக் கோட்டுக்கு முன்னாள் இருந்து விளையாடுவதே அவருடைய திட்டம். அதனால் அவர் கிட்டத்தட்ட அதற்கு பாதி முன்னால் நின்றார். ஆனால் கிரிக்கெட்டில் துரதிஷ்டவசமாக அவுட்டாக 2 வழிகள் இருக்கிறது. ஒன்று ஸ்ட்ரைக்ராக இல்லாத போது ரன் அவுட்டாவதாகும். மற்றொன்று லெக் சைட் திசையில் விளையாடி கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாவதாகும்”

- Advertisement -

விமர்சிக்க ஒன்னுமில்ல:

“அது தான் சுப்மன் கில்லுக்கு நடந்தது. நீங்கள் பந்தை விட மாட்டீர்கள். லெக் சைட் திசையில் வரும் பந்தை பார்த்ததும் சில நேரங்களில் உங்களை அறியாமலேயே உள்ளுணர்வால் உங்களுடைய பேட் அடிக்க சென்று விடும். அந்த நேரங்களில் பந்து உங்களுடைய பேட்டின் நல்ல இடங்களில் பட்டால் பவுண்டரி செல்லும். இல்லையேல் சுப்மன் கில் எட்ஜ் வாங்கி துரதிஷ்டவசமாக அவுட்டாகி செல்ல நேரிடும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: விராட் கோலியின் பழைய பலவீனத்தை வைத்து காலி செய்த வங்கதேசம்.. திட்டத்தை பகிர்ந்த தமீம் இக்பால்

மொத்தத்தில் இந்த வருடம் சொந்த மண்ணில் சுப்மன் கில் 3 முறை டக் அவுட்டாகியுள்ளார். இருப்பினும் அவரை வருங்கால கேப்டனாக பிசிசிஐ வளர்க்க நினைக்கிறது. அதனாலேயே ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டு இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -