- Advertisement -
ஆசிய கோப்பை

எந்தக் குறையும் இல்லாத ஸ்ரேயாஸ்க்கு அதிர்ஷ்டம் இல்ல.. காத்திருந்தா நிச்சயம் அது கிடைக்கும்.. பார்திவ் படேல் அட்வைஸ்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடி கோப்பையை வெல்வதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தயாராகி வருகிறது. அத்தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டதை பலரும் விமர்சித்தார்கள். ஏனெனில் 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.

2025 ஐபிஎல் சீசனில் 604 ரன்களை அடித்த அவர் 11 வருடங்கள் கழித்து கேப்டனாக பஞ்சாப்பை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு இந்திய அணியில் துணை கேப்டன்ஷிப் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் பார்த்தால் அவருக்கு ஆசியக் கோப்பைக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

அதிர்ஷ்டம் இல்ல:

அது பற்றி கேட்டதற்கு யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுப்பது என்று நீங்களே சொல்லுங்கள்? என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பதிலளித்தார். அதற்கு கடந்த ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாக விளையாடிய சிவம் துபே அல்லது ரிங்கு சிங் ஆகியோருக்கு பதிலாக ஸ்ரேயாஸை தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

இந்நிலையில் எந்தக் குறையும் சொல்ல முடியாத அளவுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் சமீப காலங்களில் அசத்தியதாக முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார். இருப்பினும் அதிர்ஷ்டமின்மையால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று படேல் தெரிவித்துள்ளார். எனவே நம்பிக்கையுடன் அமைதியாக காத்திருந்தால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஊக்கமளித்த பட்டேல்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாகவே இந்திய அணி தேர்வு செய்யப்படும் போது அதைச் சுற்றி விமர்சனங்கள் வரும். சிவம் துபே, ரிங்கு சிங் ஆகிய 2 இடது கை பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை? என்ற கேள்விகள் எழுந்தன. என்னுடைய கருத்துப்படி யாரேனும் ஒருவர் துரதிஷ்டவசமாக இருந்தாக வேண்டும்”

இதையும் படிங்க: கபில் தேவ் மேட்ச் பிக்ஸிங் செஞ்சதை இதனால் தான் மறைச்சாங்க.. 1997 பிரபாகர் குற்றசாட்டு பற்றி யோக்ராஜ்

“நீங்கள் கிரிக்கெட்டில் விளையாடும் போது அதிர்ஷ்டம் உங்களுடைய பக்கம் இருக்க விரும்புவீர்கள். அதுவே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே ஸ்ரேயாஸ் ஒரு விஷயம் மட்டுமே செய்ய வேண்டும் என்று நான் கருதுகிறேன். அது அவர் காத்திருந்து அமைதியுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார். அவர் சொல்வது போல அமைதியுடன் காத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் விரைவில் துவங்கும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -