RCB vs CSK : கடைசி பந்தில் நான் ரன் அவுட் செய்வதற்கு முன் இதைத்தான் நினைத்து கொண்டிருந்தேன் – பார்த்திவ் பட்டேல்

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி

Parthiv-1
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 39 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

VK and MS

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார் தோனி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 ரன்களும், மொயின் அலி 26 ரன்களையும் அடித்தனர். இதனால் சென்னை அணிக்கு 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து ஆடிய சென்னை அணி 20 முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை அடித்து 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ஷ்டவசமின்றி தோற்றது. தோனி 48 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்கால் இருந்தார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5 பந்துகளில் தோனி 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 24 ரன்களை சேர்த்தார். கடைசி பந்தை அடிக்க முடியாமல் விட மறுமுனையில் இருந்து பைஸ் ஓடிய தாக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டிக்கு பிறகு பேசிய பார்த்திவ் பட்டேல் கூறியதாவது : இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்து சில ஷாட்களை ஆட முயற்சித்தோம். ஆனால், பிறகே தெரிந்தது இந்த மைதானம் 200 ரன்கள் அடிக்கக்கூடிய மைதானம் இல்லை என்று இருப்பினும், நான் சிறப்பாக ஆடினேன். முதல் 6 ஓவர்களில் பந்தை அடிக்கவே திட்டமிருந்தேன். 6 ஓவர்களுக்கு பிறகு சாதகமான பவுலர்களை தேர்வு செய்து அடித்தேன்.

Shurdul

இந்த போட்டியின் இறுதி பந்தில் ஒருவேளை தோனி பந்தினை தவறவிட்டால் அதனை சரியாக ஸ்டம்பில் அடிக்க நான் முன்கூட்டியே நினைத்துக்கொண்டு மனதளவில் தயாரானேன். நான் எதிர்பார்த்தபடி தோனி பந்தை தவற விட்டதும் எதிரில் இருந்த ஸ்டம்ப் மட்டுமே வெற்றிக்கு இலக்காக தெரிந்தது அதனாலே அந்த த்ரோவை நான் சரியாக அடித்தேன் என்று பார்த்திவ் பட்டேல் கூறினார்.

Advertisement